• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திமுக-அதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள பொதுவான வாக்குறுதிகள்!

திமுக-அதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள பொதுவான வாக்குறுதிகள்!

திமுக- அதிமுக

திமுக- அதிமுக

அறிவிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று திமுக தேர்தல் அறிவிக்கையிலும், மத்திய அரசுக்கு வலியுறுத்துவோம் என்று அதிமுக தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
திமுக - அதிமுக இரண்டு கட்சிகளும் ஒரே நாளில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன. மாநில உரிமைகளை மையப்படுத்தியும், கல்வி, பயிர் கடன் ரத்து, நீட் விலக்கு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் 2 தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளன.

மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அதிமுக, திமுக இரு கட்சிகளும் நேற்று வெளியிட்டன. தமிழக மக்களின் பிரதான கோரிக்கைகள், வழக்கம்போல் இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளன.



காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிப்பது, கல்விக் கடன் மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வலியுறுத்துவது, இலங்கை தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டுவது, புதிய கேபிள் கட்டணத்தை ரத்து செய்வது உள்ளிட்ட வாக்குறுதிகள் இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் உள்ளன.

இவை தவிர, தமிழை ஆட்சி மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுகவும், அலுவல் மொழியாக அறிவிக்க நடவடிக்கை என அதிமுகவும் கூறியுள்ளன. வருமான வரி விலக்கு வரம்பை 8 லட்சமாக உயர்த்துவது, தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்களும் இரு கட்சிகளின் அறிக்கைகளிலும் பொதுவான வாக்குறுதிகளாக உள்ளன.



மேலும் 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தப்படும் என திமுகவும், 200 நாட்களாக உயர்த்தப்படும் என அதிமுகவும் அறிவித்துள்ளன. மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் 60 சதவீத தொகையை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிப்பது, சுங்க வரியை ரத்து செய்வது, பெட்ரோலிய பொருட்களை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று இரு கட்சிகளும் கூறியுள்ளன.

அறிவிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று திமுக தேர்தல் அறிவிக்கையிலும், மத்திய அரசுக்கு வலியுறுத்துவோம் என்று அதிமுக தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

Also see... அதிமுக – திமுக தேர்தல் அறிக்கைகள்... பழைய பல்லவியா? 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: