வேலூரில் தேர்தல் நடக்குமா? தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை

இன்று காலை 10 மணி முதல் 11:30 மணிவரை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

வேலூரில் தேர்தல் நடக்குமா? தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை
தேர்தல் ஆணையம்
  • News18
  • Last Updated: April 3, 2019, 9:18 AM IST
  • Share this:
மக்களவை மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் இந்திய தேர்தல் ஆணையர்கள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 18-ம் தேதி 40 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதே போல், தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு இடத்திற்கும் சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது.

நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிகளவில் பணம் பறிமுதல் செய்யப்படுவதோடு, அதிக அளவில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால், தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்காக இந்திய தோ்தல் ஆணையா்கள் அசோக் லவாசா, சுஷில் சந்திரா, தேர்தல் ஆணைய நிர்வாக இயக்குனர்கள் திலிப் ஷர்மா, திரேந்திர ஓஜா ஆகியோர் டெல்லியில் இருந்து விமானம் முலம் நேற்று மாலை சென்னை வந்தனர்.


ஆனால், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வரவில்லை. அதற்கான காரணம் குறித்தும் தெரியவில்லை. விமான நிலையத்தில் தேர்தல் ஆணையர்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாஹு, போலீஸ் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

இதைத் தொடர்ந்து விமான நிலைய ஒய்வறையில் சுமார் 15 நிமிடங்கள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, காவல் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய தேர்தல் ஆணையர்கள் பின்னர் சென்னையில் உள்ள ஒட்டலுக்கு காரில் புறப்பட்டு சென்றனர்.

இதைத் தொடர்ந்து இன்று காலை 10 மணி முதல் 11:30 மணிவரை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர்.அப்போது, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் உள்பட காலியாக இருக்கும் 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த அரசியல் கட்சியினர் வலியுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து மதியம் 11:30 மணி முதல் இரவு 7 மணி வரை மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.

அப்போது வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் அனந்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனை குறித்தும், சிமெண்ட் கிடங்கில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்தும் தேர்தல் ஆணையர்களிடம் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ விளக்கமளிப்பார் என கூறப்படுகிறது.

இன்று மாலை செய்தியாளர்களைச் சந்திக்கும் தேர்தல் ஆணையர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைகள் தொடர்பாக விவரிப்பர் என கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து நாளை காலை 10 மணிக்கு வருமான வரித்துறை அலுவலர்கள் கூட்டமும், 11:15 மணிக்கு தலைமை செயலாளர், டிஜிபி, உள்துறை செயலாளர் மற்றும் உயரதிகாரிகள் கூட்டமும் நடைபெறுகிறது.

Also Read ... கோவை துடியலூர் சிறுமியின் பெற்றோருக்கு ஸ்டாலின் ஆறுதல்!

தேர்தல் அன்று பள்ளிகள் இயங்கினால் நடவடிக்கை: தேர்தல் அதிகாரி எச்சரிக்கை

மோடி ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: அப்சரா ரெட்டி

Also see ... தேர்தல் அறிக்கை மூலமாக தேசத்தை பிரிக்கிறாரா ராகுல்  


எடப்பாடி பழனிசாமி VS டிடிவி தினகரன்... தேர்தலுக்கு பிறகு என்ன நடக்கும்?


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.







First published: April 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்