தீவிர வாக்கு சேகரிப்பில் திருநங்கை வேட்பாளரான ராதா!

திருநங்கைகளும் தேர்தலில் போட்டியிடுவது ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்கும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். 

Web Desk | news18
Updated: April 12, 2019, 12:19 PM IST
தீவிர வாக்கு சேகரிப்பில் திருநங்கை வேட்பாளரான ராதா!
திருநங்கை வேட்பாளரான ராதா
Web Desk | news18
Updated: April 12, 2019, 12:19 PM IST
மக்களவைத் தேர்தலில் தமிழகத்திலிருந்து போட்டியிடும் ஒரே திருநங்கை வேட்பாளரான ராதா, தென்சென்னை தொகுதியில் வீடுவீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 

தென்சென்னை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள திருநங்கை ராதா. சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த இவர், இளங்கலை பொருளாதாரம் படித்துவிட்டு, ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டமும் முடித்துள்ளார்.

ஆனால், திருநங்கை என்றாலே முகத்தைத் திருப்பிக் கொள்ளும் சமூகத்தால், கல்விக்கேற்ற வேலை கிடைக்கவில்லை.


அதனால் சோர்ந்து போய்விடாத ராதா, சில வீடுகளில் சமையல் வேலைகளை செய்து தனக்கான வருமானத்தை ஈட்டிக் கொள்கிறார். இப்போது, இவர் சுயேட்சை வேட்பாளராகவும் தென் சென்னை தொகுதியில் களமிறங்கியிருப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, அவரை ஆதரிக்க தாங்கள் தயாராக இருப்பதாக இளைஞர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

கம்ப்யூட்டர் மவுஸ் சின்னத்தில் போட்டியிடும் திருநங்கை ராதா, தென்சென்னை தொகுதியில் பல்வேறு இடங்களுக்குச் சென்று சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

தனது கொள்கை மற்றும் சின்னம் குறித்து துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரிக்கும் அவருக்கு மக்களின் வரவேற்பும் மிகச் சிறப்பாகவே இருக்கிறது. திருநங்கைகளும் தேர்தலில் போட்டியிடுவது ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்கும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

Loading...

சமுதாயத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட திருநங்கைகள் தற்போது, சமுதாயத்தையே மாற்றியமைக்கும் முடிவோடு களமிறங்கியிருப்பது பொதுமக்களுக்கு ஆரோக்கியமான ஆச்சரியமாக இருந்தாலும், இன்னும் நிறைய திருநங்கைகள் பல்வேறு துறைகளில் சாதனைச் சுவடுகளைப் பதிக்க வேண்டும் என்று ராதாவின் தோழி நிலா கூறுகிறார்.

தனக்கு வாய்ப்பளித்தால் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தேவையான வசதிகளை செய்து கொடுக்கத் தயாராக இருப்பதாக கூறும் திருநங்கை ராதா, தனக்கான வாக்கு வேட்டையில் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறார்.

Also see... இறுதி கட்டத்தில் தமிழக தேர்தல் களம்... காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை


Also see... பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் - எழுத்தாளர்கள், கலைஞர்கள், மருத்துவர்கள் கூட்டறிக்கை


Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

;
First published: April 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...