"தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுகவினரே காரணம்" - எடப்பாடி பழனிசாமி

பாமக நிறுவனர் ராமதாஸ், திமுகவின் அத்தியாயத்தை இந்த தேர்தலுடன் ஸ்டாலினே முடித்து வைக்கப்போவதாக விமர்சித்துள்ளார்.

Web Desk | news18
Updated: April 15, 2019, 7:45 AM IST
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
Web Desk | news18
Updated: April 15, 2019, 7:45 AM IST
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரியில் அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமியை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என கூறும் மு.க.ஸ்டாலின், உணவு விடுதியில் கட்ட பஞ்சாயத்து செய்வதாக விமர்சித்தார். சட்டம்-ஒழுங்கு கெட திமுகவினரே காரணம் எனவும் முதல்வர் விமர்சித்தார்.

சேலம் தொகுதி வேட்பாளர் சரவணனை ஆதரித்து, சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர், மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு பிறகுதான் தனது அரசியல் வாழ்க்கை தொடங்க உள்ளதாக சூளுரைத்தார்.

முதல்வர் - நிதின் கட்கரி


இதே கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், திமுகவின் அத்தியாயத்தை இந்த தேர்தலுடன் ஸ்டாலினே முடித்து வைக்கப்போவதாக விமர்சித்தார்.

டி.ஆர்.பாலுவை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம்

ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சேலம் பிரசார கூட்டத்தில், 8 வழிச்சாலை திட்டம் நிச்சயம் நிறைவேறும் என பேசும்போது, ராமதாஸ் ஏன் தடுக்கவில்லை என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

கன்னியாகுமரி வேட்பாளரை ஆதரித்து கமல் பிரசாரம்

கன்னியாகுமரி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எபினேசரை ஆதரித்து நாகர்கோவிலில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் கலந்துகொண்டார். நீதிமன்றம் மறுத்தாலும் மக்களிடம் பேசி எட்டு வழி சாலையை அமைத்தே தீருவோம் என கூறும் மத்திய அமைச்சர், யாரிடம் விலை பேசுகிறார் என கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார்.

ஆரணி வேட்பாளரை ஆதரித்து டிடிவி தினகரன் பரப்புரை

ஆரணி தொகுதி அமமுக வேட்பாளர் செந்தமிழனை ஆதரித்து இரும்பேடு கிராமத்தில் டிடிவி தினகரன் பிரசாரம் செய்தார். தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் தரக்கூடாது என கர்நாடகாவில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளதாக கூறிய தினகரன், தமிழகத்தில் அதைப் பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாயே திறக்கவில்லை என விமர்சித்தார்.

தென் சென்னை வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரசாரம்

தென் சென்னை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஷெரினுக்கு ஆதரவாக சோழிங்கநல்லூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் கலந்துகொண்டு பிரசாரம் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது கொள்கைகளை காப்பி அடிப்பதாக குற்றம்சாட்டினார்.

தமிழக தேர்தல் பிரசார களம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்வதால் தலைவர்களின் பிரசாரத்தில் மேலும் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.

Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also See... பாரிவேந்தருக்கு அருள்வாக்கு சொன்ன மாரியாத்தா - வீடியோ
First published: April 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...