ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தோல்வி பயத்தில் மு.க.ஸ்டாலின் ஏதேதோ பேசுகிறார்: எடப்பாடி பழனிசாமி

தோல்வி பயத்தில் மு.க.ஸ்டாலின் ஏதேதோ பேசுகிறார்: எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அதிமுக கூட்டணியில் வலிமையான வாக்கு வங்கிகள் உள்ள கட்சிகள் இணைந்துள்ளது என்று முதல்வர் கூறினார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

தோல்வி பயத்தால் மு.க.ஸ்டாலின் தன்னை அறியாமலேயே பேசி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

திருச்சி மக்களவை தொகுதிக்குட்பட்ட கந்தர்வக்கோட்டை, திருச்சி காந்தி மார்கெட் மற்றும் சோமரசம்பேட்டை ஆகிய இடங்களில் தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி வாக்கு சேகரித்தார்.

அதிமுக கூட்டணியில் வலிமையான வாக்கு வங்கிகள் உள்ள கட்சிகள் இணைந்துள்ளதால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வி பயத்தில் இருப்பதாகவும், அதனால் தேர்தல் பரப்புரையில் ஏதேதோ பேசி வருவதாகவும் விமர்சித்தார்.

மேலும் மருத்துவத் துறையில் பல்வேறு சாதனைகளை செய்து கொண்டிருக்கும் தமிழகம், இந்தியாவிலேயே சுகாதாரத் திட்டங்களை மிகவும் சிறப்பாக செயல்படுத்தி வருவதாக கூறினார். வேளாண்மைக்கு உயிராக இருக்கும் நீர் வளத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக  முதலமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் அதற்கான திட்டங்களை விளக்கிப் பேசினார். மக்கள் நலனுக்காக அரசு கொண்டுவரும் திட்டங்களை திமுக தடுக்க முயற்சிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

Also see... ஹெச்.ராஜா யார் என்றே எனக்கு தெரியாது! கார்த்தி 

Also Read.... 

சாலையோர வாகனத்தை அடித்து நொறுக்கிய காவலர்கள் சஸ்பெண்ட்!

ஒரே மேடையில் 15 சுயேட்சை வேட்பாளர்கள் கூட்டாக பிரசாரம் செய்ய முடிவு!


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


First published:

Tags: Edappadi Palaniswami, Elections 2019, Lok Sabha Election 2019, Tamil Nadu Lok Sabha Elections 2019, Tiruchirappalli S22p24