ஜெயலலிதாவைவிட எடப்பாடி அரசுதான் அதிக நலத்திட்டங்களை வழங்கியது : பாமக வேட்பாளர்

பொங்கல் பரிசு 100 ரூபாய் கொடுத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விட எடப்பாடி அரசு 1000 ரூபாய் வழங்கியுள்ளது என்று பாமக வேட்பாளர் ஜோதி முத்து தெரிவித்துள்ளார்.

Web Desk | news18
Updated: April 16, 2019, 3:00 PM IST
ஜெயலலிதாவைவிட எடப்பாடி அரசுதான் அதிக நலத்திட்டங்களை வழங்கியது : பாமக வேட்பாளர்
பாமக ஜோதி முத்து
Web Desk | news18
Updated: April 16, 2019, 3:00 PM IST
ஜெயலலிதாவை விட எடப்பாடியின் அரசுதான் அதிகமான நலத்திட்டங்களை வழங்கி  சிறப்பாக செயல்பட்டு வருகின்றது என்று திண்டுக்கல்லில் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் பாமக வேட்பாளர் ஜோதி முத்து தெரிவித்தார்.

திண்டுக்கல் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும்  பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஜோதிமுத்து, நகரின் முக்கிய வீதிகளில் வாக்குகள் சேகரித்தார். அப்போது பேசிய அவர்,  இந்த அரசு கருவறை முதல் கல்லறை வரை நலத்திட்டங்களை வழங்கிவிடும் அரசு என்றும் ஜெயலலிதாவைவிட எடப்பாடியின் அரசு அதிகமான நலத்திட்டங்களை வழங்கி  சிறப்பாக செயல்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.

மேலும் பொங்கல் பரிசு 100 ரூபாய் கொடுத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விட எடப்பாடி 1000 ரூபாய்  வழங்கியுள்ளார் என்று தெரிவித்தார். அதேபோல் ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் வறுமைக்கோட்டுக்கீழ் வாழும் மக்களுக்கு 2000 கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்தத் தேர்தல் முடிந்தவுடன் வங்கியில் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். எனவே மிகச் சிறப்பாக செயல்படும் இந்த அரசோடு சேர்ந்து என்னையும் பணியாற்ற இலையுடன் கூடிய மாங்கனி சின்னத்திற்கு வாக்குகளியுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

Also see... காற்றை விற்று பணமாக்குபவர் தயாநிதி மாறன் - பிரேமலதா குற்றசாட்டு!  

கமல் மாட்டிக்கொண்டார்; ரஜினி தப்பித்தார் - திருநாவுக்கரசர்  

Also see... இருசக்கர வாகனத்தில் சென்று நாராயணசாமி தீவிர பிரசாரம்!


Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...