காங்கிரசும், திமுகவும் பெண்களுக்கு எதிரான கட்சிகள் என விமர்சித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, திமுக ஆணாதிக்கம் மிகுந்த கட்சி எனவும் கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் பிரசார கூட்டம், கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்த பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் வரவேற்றனர். தொடர்ந்து கொடீசியா வளாகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்ட அரங்கிற்கு வந்த பிரதமர், கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, திருப்பூர் ஆகிய மக்களவைத் தொகுதி கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். தமிழில் தனது உரையைத் தொடங்கிய பிரதமர், மருதமலை முருகனுக்கு அரோகரா என கூறினார்.
திமுக, காங். கட்சிகள் பெண்களுக்கு எதிரானவை:
தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மகளிருக்காக மத்திய, மாநில அரசுகள் பாடுபட்டு வருவதாகக் கூறினார். பிரதமரின் வீடு கட்டும் திட்டங்கள் உள்ளிட்டவை பெண்கள் பெயரில் வழங்கப்படுவதாக குறிப்பிட்டார். மேலும் மகப்பேறு விடுமுறையை 26 வாரங்களாக அரசு உயர்த்தியிருப்பதாகவும் கூறினார். ஆனால், திமுக, காங்கிரஸ் கட்சிகள் பெண்களுக்கு எதிரானவை என கூறிய பிரதமர், கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
நதி நீர் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும்:
ஜிஎஸ்டி வரி விதிப்பால் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பிரதமர் மோடி, தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்கவும், நீர் மேலாண்மையை கையாளவும் தனி அமைச்சகம் ஏற்படுத்த உள்ளதாகவும், நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும் கூறினார்.
தண்ணீர் பற்றாக்குறை என்பது உலகம் முழுவதும் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண இந்தியா தயாராக உள்ளது. தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க தனி அமைச்சகம் அமைக்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. நீர் ஆதாரங்களை முறையாக பயன்படுத்துவதை உறுதிசெய்ய சிறப்புக் குழு அமைக்கப்படும்.
வரும் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்கும் இளம் தலைமுறை வாக்காளர்கள், தேச நலனை உறுதிபடுத்தவும், குடும்ப ஆட்சிக்கு எதிராகவும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி:
முன்னதாக பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேமுதிக, பாமக, புதிய தமிழகம் கட்சியின் முக்கியத் தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also see... சேப்பாக்கத்தில் ஷாருக்கானுடன் அட்லி... விஜய் 63 படத்துக்கான டிஸ்கஷனா?
Also see... தலைவர்களின் தகுதி: ஓ. பன்னீர்செல்வத்தின் தகுதி என்ன?
Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.