மோடி- ராகுல் நாளை தமிழகத்தில் பிரசாரம்

பிரதமர் மோடி, மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி மதுரை வருவதால், மதுரை விமான நிலையம் மற்றும் நகர் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மோடி- ராகுல் நாளை தமிழகத்தில் பிரசாரம்
ராகுல் காந்தி - நரேந்திர மோடி
  • News18
  • Last Updated: April 11, 2019, 11:32 AM IST
  • Share this:
பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நாளை மதுரை விமான நிலையம் வருவதால் அங்கு உச்ச கட்ட பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை மாலையும் பிரதமர் நரேந்திர மோடி இரவும் தென் தமிழகத்தில் பிரசாரம் செய்தவதற்காக மதுரை விமான நிலையம் வருகின்றனர்.

அதனால் மதுரை விமான நிலையத்தில் உச்சக்கட்டமாக 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர்கள் விமான நிலையத்தின் உள்வளாக பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


விமான நிலைய வெளி வளாகத்தில் பயணிகள் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிவிரைவு அதிரடிப்படை வீரர்கள் வாகனங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர். வெடிகுண்டு மற்றும் தடுப்பு பிரிவில் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை செய்யப்படுகிறது.

தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி, மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி மதுரை வருவதால், மதுரை  நகர் பகுதிகளிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Also see... காலத்தின் குரல்: மோடியின் நம்பிக்கை பலிக்குமா? 

Also see... அரசியல் ஆரம்பம்: மோடி VS கமல்: யார் ரஜினியின் சாய்ஸ்? 


Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
First published: April 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்