உங்கள் வாக்கை கொடுங்கள்... தமிழகத்திற்கு உயிரைக் கொடுப்போம் - கமலஹாசன் பிரசாரம்

நாங்கள் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை என்று கமல் பிரசாரத்தில் பேசினார்.

Web Desk | news18
Updated: April 15, 2019, 12:31 PM IST
உங்கள் வாக்கை கொடுங்கள்... தமிழகத்திற்கு உயிரைக் கொடுப்போம் - கமலஹாசன் பிரசாரம்
கமல் ஹாசன்
Web Desk | news18
Updated: April 15, 2019, 12:31 PM IST
அரசியலில் உள்ள ஆபத்தையும் அசிங்கத்தையும் உணர்ந்து ஒதுங்கியே இருந்ததால், நதிகள் மாசடைந்து விட்டன என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார். 

திருச்சியில் மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஆனந்தராஜாவை ஆதரித்து, மத்திய பேருந்து நிலையம் அருகே மக்கள் நீதி மய்யத் தலைவர் கமலஹாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், அரசியலில் உள்ள ஆபத்தையும் அசிங்கத்தையும் உணர்ந்து ஒதுங்கியே இருந்ததால், நதிகள் மாசடைந்து விட்டன. சாராய வியாபாரத்தை கையில் எடுத்துக்கொண்டு, கல்வியை வியாபாரமாக்கி விட்டது தமிழக அரசு. அரசுப் பள்ளிகளை மீட்டு உலகத் தரத்திற்கு உயர்த்துவவோம். தண்ணீரை காசுக்கு விற்க கூடாது என்று கூறினார்.

அதன் பின்னர் தமிழர்கள் தேசிய நீரோட்டத்தில் கலக்க மாட்டார்கள் என்று 1980-க்கு பிறகு வந்தவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நமக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று எக்கேடு கெட்டுப் போனாலும் போகட்டும் என்று விட்டு விட்டார்கள். ஆனால் இங்கு பலருக்கு தேசிய தலைவர்களின் பெயரை சூட்டியுள்ளனர். ஆனால் தமிழ்நாட்டு தலைவர்களின் பெயரை வட நாட்டவர்கள் வைத்துக் கொள்ளவில்லை.

அண்ணா சொன்னது போல் தெற்கு தேய்கிறது என்பது போல் தேய்த்து கொண்டே இருக்கிறார்கள். இதற்கு நாம் அனுமதிக்க கூடாது. மணல்கொள்ளை மூலமாக கண்மூடித்தனமாக, முட்டாள்தனமாக, மனிதத்திற்கு எதிராக பல விதமாக செயல்படுகிறார்கள். அவர்களை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும்.

நாங்கள் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை. கைதட்டும் நீங்களும் சுத்தமாக இருக்க வேண்டும் என்றார். உங்களுக்காக உயிரைக் கொடுப்பேன் என்பதற்கு பதிலாக  எனக்காக யாரும் உயிரைக் கொடுக்க வேண்டாம். உங்கள் வாக்கைக் கொடுங்கள் போதும். அதன்பிறகு தமிழ்நாட்டுக்கு உயிர்கொடுப்போம் என்று பேசினார்.

Also see... டிவியில் இருந்து கேபினட் வரை.... ஸ்மிருதி இராணியின் பயணம்...!  

உலகத் தமிழர்களை இணைப்பதே ஆறாம் உறுதிமொழி - கமல் ஹாசன்

Also see... அரசியல் ஆரம்பம் | நீட்டைத் தொடர்ந்து எட்டு வழி சாலையிலும் சிக்கலா?

Also see... 
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...