தமிழகத்தில் நாளை மறுநாள் தேர்தல்: தீவிர சோதனையில் பறக்கும் படை அதிகாரிகள்

அனைத்து தொகுதிகளிலும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு பண விநியோகத்தை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.

Web Desk | news18
Updated: April 16, 2019, 7:56 AM IST
தமிழகத்தில் நாளை மறுநாள் தேர்தல்: தீவிர சோதனையில்  பறக்கும் படை அதிகாரிகள்
ஈரோட்டில் நடந்த சோதனை
Web Desk | news18
Updated: April 16, 2019, 7:56 AM IST
நாளை மறுநாள் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையும், வருமானவரித்துறையினரின் சோதனைகளும் தீவிரமடைந்துள்ளன.

கோவை

கோவையில் இரு வேறு இடங்களில் நடைபெற்ற வாகன சோதனையின் போது, ஏடிஎம் மையங்களுக்கு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடியே 38 லட்சம் ரூபாய் பணம், பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

வேலூர்

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் சாலையில் போட்டு சென்ற 13 லட்சத்து 60,000 ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பன்னீர்செல்வம் நகர் பகுதியில் வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்து வருவதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்றனர். இதையறிந்த அரசியல் கட்சியினர் கையில் வைத்திருந்த பண பையை கீழே போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். அதை பறிமுதல் செய்த அதிகாரிகள், போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்

சேலம் மாநகரில் 24 -வது கோட்டம் பிள்ளையார் நகரில் உள்ள அதிமுக பிரமுகர் முத்துசாமி வீட்டில் பணத்தை பதுக்கி வைத்து, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து வருவதாக மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் அவர் வீட்டில் இருந்த 3 லட்சத்து 30,000 ரூபாயை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

ஈரோடு

ஈரோடு அருகே வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் பதுக்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து, அதிமுக முன்னாள் ஊராட்சித் தலைவர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் ரவி என்பவர் வீட்டில் சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில், பணம் மற்றும் எந்த ஆவணங்களும் சிக்காததால் அதிகாரிகள் சென்று விட்டனர்.

கடலூர்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே துணிப்பையில் எடுத்துச் சென்ற 19 லட்சத்து 56,000 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

கண்டப்பங்குறிச்சி பெட்ரோல் பேங்க் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்ட போது, அவ்வழியாக துணிப்பையுடன் நடந்து சென்ற ஏ. சித்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரஜினி என்பவரிடம் சோதனை நடத்திய போது, அவர் பணத்தை மறைத்து எடுத்துச்சென்றது தெரிய வந்தது.

தென் சென்னை

தென் சென்னை தொகுதிக்குட்பட்ட சைதாப்பேட்டை பகுதியில், இரவில் வீடு வீடாக சென்று பணம் பட்டுவாடா செய்ததாக அமமுகவை சேர்ந்த இரண்டு பேரை அதிமுகவினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பாபு மற்றும் குமார் ஆகிய 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொகுதி முழுவதும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு பண விநியோகத்தை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Also see... ’ஸ்டாலினை நம்பி வாக்களிக்காதீர்கள்’ - முதல் பிரசாரத்தை தொடங்கிய விஜயகாந்த் பேச்சு  

மோடிக்காக களமிறங்கிய பத்திரிகையாளர் மாலன்! கேள்விகளால் துளைத்தெடுத்த நிருபர்கள்

Also see... உற்சாகமாக பிரசாரத்தைத் தொடங்கிய விஜயகாந்த்: புகைப்படத் தொகுப்பு

Also see... 




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...