தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை: தேர்தல் ஆணையர்கள் பங்கேற்பு

இன்று காலை வருமான வரித்துறை, சுங்கத்துறை அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசிக்க உள்ளனர்.

தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை: தேர்தல் ஆணையர்கள் பங்கேற்பு
தேர்தல் ஆணையர் ஆலோசனைக் கூட்டம் - கோப்புப் படம்
  • News18
  • Last Updated: April 4, 2019, 11:16 AM IST
  • Share this:
தமிழகத்தில் 39 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே நாளில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தினர்.

தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக, டெல்லியில் இருந்து தேர்தல் ஆணையர்கள், சுசில் சந்திரா, அசோக் லவசா, இயக்குநர்கள் திலீப் சர்மா, திரேந்திர ஒஜா ஆகியோர் சென்னை வந்தனர். கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில், பத்து அங்கரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் அவர்கள் தனித்தனியே ஆலோசனை நடத்தினர். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகுவும் உடன் இருந்தார்.

அதிமுக சார்பில் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், வேலூர் தொகுதியில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் குற்றம் நிரூபணமானால் வேட்பாளர் கதிர் ஆனந்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென வலியுறுத்தியதாக தெரிவித்தார்.


திமுக சார்பில் கலந்து கொண்ட அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, 4 தொகுதி இடைத்தேர்தலை மக்களவைத் தேர்தலோடு நடத்துவது பற்றியும், வேலூரில் நடைபெற்ற சோதனையில் விதிமீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மனு அளிக்கப்பட்டதாக கூறினார். தேர்தல் அறிவிப்புக்குப் பின் தாங்கள் அளித்த 12 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காதது பற்றியும் தேர்தல் ஆணையர்களிடம் திமுக முறையிட்டுள்ளது.

இதேபோன்று மற்ற கட்சிகளும் தங்கள் புகார்களை தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் முறையிட்டனர். அரசியல் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்குப் பின், அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்களுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தினர். தேர்தல் ஏற்பாடுகள், முறைகேடுகளை தடுப்பது, பறிமுதல் நடவடிக்கைகள் பற்றி விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனையில் அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார், பாபு முருகவேல், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் பங்கேற்றனர். திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி எம்பி, இளங்கோ, தேமுதிக சார்பில் சந்திரன், பாஜக சார்பில் திருமலைசாமி, காங்கிரஸ் சார்பில் தாமோதரன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.காலை வருமான வரித்துறை, சுங்கத்துறை அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசிக்க உள்ளனர். அந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டி.ஜி.பி ராஜேந்திரன், உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.

Also Read... தலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் தாமரை மலரவே மலராது: மு.க.ஸ்டாலின்  

எதிர்க்கட்சிகளின் கையில் நாட்டை கொடுத்தால் நாடு சீரழிந்து விடும்: முதலமைச்சர்

Also See... நடக்குமா 18 தொகுதி இடைத்தேர்தல்?


Also Read... 
ஐ.பி.எல் தகவல்கள்

POINTS TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:


SCHEDULE TIME TABLE:


Also See...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading