தமிழகத்தில் ஓய்ந்தது பிரசாரம்!

இன்று மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டமோ, ஊர்வலமோ நடத்தக்கூடாது.

Vijay R | news18
Updated: April 16, 2019, 6:09 PM IST
தமிழகத்தில் ஓய்ந்தது பிரசாரம்!
தேர்தல் பிரசாரம்
Vijay R | news18
Updated: April 16, 2019, 6:09 PM IST
தமிழகத்தில்  மக்களவை தொகுதி மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது.

தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டமோ, ஊர்வலமோ நடத்தக்கூடாது.

மேலும் தொலைக்காட்சி, ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், டுவிட்டர் வாயிலாக பிரசாரம் செய்ய தடை விதிக்கப்படும். கருத்துக் கணிப்பு அல்லது தேர்தல் தொடர்பான ஆய்வு முடிவுகளை காட்சிப்படுத்தவும் தடை விதிக்கப்படுகிறது.

தேர்தல் தொடர்பான கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் நடத்தக்கூடாது. வெளியூரில் இருந்து வரவழைக்கப்பட்ட அரசியல் கட்சியினர், மாலை 6 மணிக்கு மேல் சம்பந்தமில்லாத தொகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும்.

தமிழகத்தில் நாளை மறுநாள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மக்களவை தொகுதிக்கு மட்டும் இரவு 8 மணி வரை கூடுதலாக 2 மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.

வாக்குப்பதிவு நாளன்று, வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்துச் செல்ல வேட்பாளர்கள் தங்களது வாகனத்தை பயன்படுத்தக் கூடாது.

இதேபோல், வாக்குப்பதிவு மையத்தின் 100 மீட்டர் எல்லைக்குள் பொதுமக்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் காவல் உயர் அதிகாரிகள் செல்போன் பயன்படுத்த தடையில்லை.

அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அந்த இடங்களிலும் இன்று மாலை 6 மணி முதல் 18-ம் தேதி வாக்குப்பதிவு முடிவடையும் வரை பிரசாரம் செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு  சட்டமன்ற தேர்தலை காட்டிலும், தற்போதைய தேர்தலில் அதிக அளவில் பணம் பிடிபட்டுள்ளது. அதாவது 2016 தேர்தலில் 113 கோடி ரூபாயும், தற்போது 139 கோடியே 91 லட்சம் ரூபாயும் பிடிபட்டிருப்பதாக சத்யபிரதா சாஹூ தெரிவித்தார். தேர்தல் விதிமீறல் தொடர்பாக 261 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Also see... நான் இந்துக்களுக்கு எதிரியல்ல’ என மு.க. ஸ்டாலின் குரலில் மிமிக்ரி செய்த டிடிவி

Also see... 
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...