துரோகிகளுக்கு பாடம் புகட்டும் தேர்தலாக இந்தத் தேர்தல் இருக்கும்: முதல்வர்

ஆளுங்கட்சியின் சாதனைகளை கூறுவதற்கு பதிலாக திமுக கூட்டணியை திட்டுவது மட்டுமே முதலமைச்சர் செய்து வருவதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

Web Desk | news18
Updated: April 3, 2019, 9:17 AM IST
துரோகிகளுக்கு பாடம் புகட்டும் தேர்தலாக இந்தத் தேர்தல் இருக்கும்: முதல்வர்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
Web Desk | news18
Updated: April 3, 2019, 9:17 AM IST
துரோகிகளுக்கு பாடம் புகட்டும் தேர்தலாக இந்தத் தேர்தல் இருக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழிசைக்கு ஆதரவாக முதல்வர் வாக்கு சேகரிப்பு:

தூத்துகுடியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை மற்றும் விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் சின்னப்பன் ஆகியோரை ஆதரித்து தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சி தொடரக்கூடாது என நினைக்கும் துரோகிகளுக்கு பாடம் புகட்டும் தேர்தலாக இது அமைய வேண்டும் என்று பேசினார்.


ஆ.ராசாவுக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு:

நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவுக்கு ஆதரவாக மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், 5 ஆண்டுகளாக மத்தியிலும், 8 ஆண்டுகளாக மாநிலத்திலும் ஆட்சியில் இருந்து அதிமுக கூட்டணி ஆட்சியில் செய்த திட்டங்களை பேசுவதற்கு பதில், திமுகவையும், அதன் கூட்டணிக் கட்சிகளைப் பற்றி பேசுவதையே முதலமைச்சர் வாடிக்கையாக வைத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

அவிநாசியில் வாகனத்தை விட்டு கீழே இறங்கி வாக்கு சேகரித்தார்


Loading...

மேட்டுப்பாளையத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டதை முடித்துகொண்டு திருப்பூர் வந்த திமுக தலைவர் ஸ்டாலின் வரும் வழியில், அவிநாசியில் வாகனத்தைவிட்டு கீழே இறங்கி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்தவாறே நீலகிரி தொகுதி வேட்பாளர் ஆ.ராசா-வுக்கு வாக்குகள் சேகரித்தார்.

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா:

கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்களுக்காக 5.42 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளதாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதரித்து திருமயம் அருகே உள்ள லெணா விளக்கு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய அவர், மோடி மீண்டும் பிரதமராவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது என தெரிவித்தார்.

முன்னதாக அமித்ஷா வருவதற்கு முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் மேடைக்கு முன்பு அமர்ந்திருந்தனர். ஆனால் அவர் வந்த பிறகு சிறிது சிறிதாக கூட்டம் கலையத் தொடங்கியது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசிக்கொண்டிருக்கும்போது ஏராளமானோர் திடீரென்று கலைந்து செல்லத் தொடங்கினர். இதனை அறிந்த அமித்ஷா, அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சை சீக்கிரமாக முடிக்கச் சொல்லி கூறியதுடன் தன்னுடைய பேச்சைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read ... வேலூரில் தேர்தல் நடக்குமா? தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை  

கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் தொண்டர்!

பெங்களூரு அணிக்கு 6-வது இடம்

Also see... காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நிதி ஆயோக் கலைக்கப்படும் - ராகுல்


அரசியல் ஆரம்பம்: ஆர்.கே.நகரை நினைவுபடுத்துகிறதா வருமானவரிதேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...