பாஜகவில் பிரதமர் முதல் வேட்பாளர் வரை பொய்யர்கள்: பி.ஆர்.நடராஜன்

பி.ஆர்.நடராஜன்

மத்தியில் ராகுல் காந்தி பிரதமராக பதவி ஏற்பதும், தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராவது உறுதி என்று பி.ஆர்.நடராஜன் தெரிவித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பாஜகவில் பிரதமர் முதல் கோவை வேட்பாளர் வரை பொய்யர்களாக இருப்பதாக கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை மக்களவைத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொண்டு வருகிறார். புலியகுளம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர், கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ‘‘பா.ஜ.க. வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்தல் அறிக்கையில் ஜி.எஸ்.டி.யை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் ஜி.எஸ்.டி.யால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் மாறிமாறி கூறியுள்ளார்.

வாக்குகளுக்காக சி.பி.ராதாகிருஷ்ணன் பொய் பேசுகிறார். பாஜகவின் பிரதமர் முதல் வேட்பாளர் வரை அனைவரும் பொய்யர்களாக இருகிறார்கள். மூச்சுக்கு 300 தடவை அம்மா ஆட்சி என சொல்லும் அதிமுகவினர், ஜெயலலிதாவின் வழியில் நடக்கவில்லை.

மத்தியில் ராகுல் காந்தி பிரதமராக பதவி ஏற்பதும், தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராவதும் உறுதி. வேட்பாளர்களை சரியாகத் தேர்வு செய்து வாக்களிக்க வேண்டும். இளம் வாக்காளர்கள் சிந்தித்து வேட்பாளர்களின் தகுதி மற்றும் செயல்பாடுகளைப் பார்த்து வாக்களிக்க வேண்டும்’’ என்று பேசினார்.

Also see... கருணாநிதிக்கு 6 அடி இடம் கொடுக்க மறுத்தவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் - மு.க.ஸ்டாலின்  

அரசியலால் பிரிந்து நிற்கும் கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் குடும்பம்!

Also see... மோடி இனி பிரதமராக முடியாது: முதல்வர் நாராயணசாமி


Also see... 
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Published by:Vaijayanthi S
First published: