தமிழகத்தில் தேனி உட்பட 4 இடங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை பிரசாரம் மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் வருகிற 16-ந்தேதி மாலை 5 மணியுடன் ஓய்கிறது. அதனால் அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக நாளை தமிழகம் வருகிறார். கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திருப்பரங்குன்றம் ஆகிய 4 ஊர்களில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் பங்கேற்கிறார். அவருடன் ஒரே மேடையில் தானும் பிரசாரத்தில் கலந்து கொள்ள உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நியூஸ் 18 முதன்மை ஆசிரியர் குணசேகரன் நடத்திய தேர்தல் சிறப்பு நேர்காணலில் மு.க.ஸ்டாலின் இதை கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also see... அமேதி தொகுதியை தக்க வைப்பாரா ராகுல் காந்தி?
Also see...மக்கள் முன் உரையற்றியபோது கண்ணீர்விட்ட அன்புமணி
Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.