Home » News » Tamil-nadu » LOK SABHA ELECTION 2019 ALL PARTY MEETING STARTED WITH ELECTION COMMISSIONERS IN CHENNAI GUINDY VA

அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டி.ஜி.பி ராஜேந்திரன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி மற்றும் உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!
தேர்தல் ஆணையர்கள்
  • News18
  • Last Updated: April 3, 2019, 3:57 PM IST
  • Share this:
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன், தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தேர்தல் ஆணையர்கள் சுசில் சந்திரா, அசோக் லவசா, தேர்தல் ஆணைய இயக்குநர்கள் திலீப் சர்மா, திரேந்திர ஒஜா ஆகியோர் ஆலோசனையில் கலந்து கொண்டுள்ளனர்.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெறும் ஆலோசனையில், அ.தி.மு.க, தி.மு.க, தே.மு.தி.க, பா.ஜ.க, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.


இந்த கூட்டத்திற்கு பின்னர் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்டக் கண்காணிப்பாளர்களுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

நாளை காலை 10 மணிக்கு, தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான கூட்டம் நடைபெற உள்ளது. இதில் வருமானவரித்துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.

அந்த கூட்டத்தைத் தொடர்ந்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டி.ஜி.பி ராஜேந்திரன், உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி மற்றும் உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.Also see... புதுச்சேரி: அழகுசாதன பொருட்கள் விற்பனை கடையில் சூறையாடிய 2 பேர் கைது! 

காங்..ஆட்சிக்கு வந்தால் கிரண்பேடியால் உயர்த்தப்பட்ட வரிகள் குறைக்கப்படும்: நாராயணசாமி  

கனிமொழிக்காக உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு.. மோடி, இபிஎஸ், ஓபிஎஸ் மீது கடும்தாக்கு 

 




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.







First published: April 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading