#LokSabhaElection | நடிகர் அஜித்குமார் திருவான்மியூரில் வாக்களித்தார்

Lok Sabha Election 2019 | தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

Web Desk | news18
Updated: April 18, 2019, 7:50 AM IST
#LokSabhaElection | நடிகர் அஜித்குமார் திருவான்மியூரில் வாக்களித்தார்
வாக்களிக்க வந்த அஜித்
Web Desk | news18
Updated: April 18, 2019, 7:50 AM IST
திருவான்மியூரில் உள்ள வாக்கு மையத்தில் நடிகர் அஜித்குமார் தன்னுடைய ஜனநாயக கடைமையை ஆற்றும் வகையில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இன்று மாலை 6 வரை நடைபெறுகிரது.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியவுடனேயே முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சிவகங்கை மாவட்டம் கண்டனூரில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.



அவரைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமார்  திருவான்மியூரில் உள்ள வாக்குமையத்தில் தனது வாக்கைப் பதிவு செய்தார். அவருடன் அவரது மனைவி ஷாலினி வாக்களித்தார். அப்போது அவருடைய ரசிகர்கள் குவிந்தனர். தலைவா தலைவா என்று சத்தமிட்டு உற்சாகம் அடைந்தனர்.



தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டப்பேரவை தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also see... கதையல்ல வரலாறு | தேர்தல்.. .சினிமா... அரசியல்...!


Also see...




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...