கருணாநிதி மறைவை நினைவு கூர்ந்து பிரசாரத்தில் கண்கலங்கிய உதயநிதி!

கலைஞர் மறைந்தும் போராடி வென்றார் என்று உதயநிதி ஸ்டாலின் உருக்கமாக பேசினார்.

Web Desk | news18
Updated: April 13, 2019, 11:40 AM IST
கருணாநிதி மறைவை நினைவு கூர்ந்து பிரசாரத்தில் கண்கலங்கிய உதயநிதி!
உதயநிதி
Web Desk | news18
Updated: April 13, 2019, 11:40 AM IST
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் நடந்த பிரசார பொதுக்கூடத்தில் கலைஞர் கருணாநிதியின் மரணம் குறித்து பேசியபோது கண்கலங்கினார். 

திமுக வேட்பாளர்கள் வேலுச்சாமி மற்றும் சௌந்தரபாண்டியன் ஆகியோரை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அதில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஐ.பி.செந்தில்குமார், சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முரசொலி நிர்வாக இயக்குனரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பேசினார் .

அப்போது அவர் கலைஞர் உடலை, அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்ய நடத்த சட்டப் போராட்டத்தை நினைவு கூர்ந்து கண் கலங்கினார். மேலும் திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் இருந்தபோது அனைத்து சிகிச்சையும் வெளிப்படையாக நடைபெற்றது என்றும்  மரணப்படுக்கையில் இருந்தபோது எழுந்து வா தலைவா என தமிழக மக்கள் அவரை அழைத்தனர் என்றும் கூறி கண்கலங்கினார்.

மேலும் கலைஞரின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியுமால் போய்விடுமா என்று இருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி மெரினாவில் இடம் ஒதுக்கியது. கலைஞர் மறைந்தும் போராடி வென்றார் என்று உதயநிதி ஸ்டாலின் உருக்கமாக பேசினார்.

அப்போது உடன் இருந்த கலைஞர் வேலுச்சாமி மற்றும் சௌந்தரபாண்டியனும் கண் கலங்கினர்.

Also see... தமிழச்சி தங்கபாண்டியனை ஜே.சி.பி முலம் மலர் தூவி வரவேற்ற திமுக பிரமுகர்! 

தேர்தலுக்குப் பிறகு கிரண் பேடி மாற்றப்படுவார்: நமச்சிவாயம் 

Also see... அரசியல் ஆரம்பம் | தமிழ்நாட்டை தமிழர்கள்தான் ஆளவேண்டும் ராகுல் சொல்வதின் அரசியல் என்ன?


Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...