எந்த வளர்ச்சித் திட்டங்கள் வந்தாலும் மக்களின் விருப்பத்தின் அடிப்படையில்தான் இருக்கும். மக்கள் விரும்பும் போது எந்தத் திட்டத்தையும் தடைசெய்ய முடியாது. 8 வழிச்சாலையை மக்கள் விரும்பும் போது, அதை யாராலும் தடுக்க முடியாது என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பொன்.இராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘‘எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுக்கு எந்த பதிலும் கூற நான் விரும்பவில்லை. பிச்சை எடுப்பவன் காசு போட்டால் தர்மபத்தினி என்றும் கிடைக்கவில்லை என்றால் மூதேவி என்றும் கூறுவான். அதனால் ஓட்டுக்காக அரசியல் கட்சியினரின் குற்றச்சாட்டுக்கு பதில் கூற நான் விரும்பவில்லை.
கன்னியாகுமரி மாவட்ட மக்கள் முழு நேரமாக உழைக்கும் எம்.பி-யை விரும்புகிறார்களே தவிர பார்ட் டைம் எம்.பி யை விரும்பவில்லை. ராகுல்காந்தி வந்தால்தான் மாற்றம் ஏற்படும் என குஷ்பூ சொல்வது உண்மைதான், அப்படி நடந்தால் முழித்து கொண்டு இருப்பவர்கள் எல்லாம் தூங்கி விடுவார்கள், வளர்ச்சி எல்லாம் பாழாய் போகும்.
தமிழகத்தில் 40-ம் நமதே என்ற அடிப்படையில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெறும்.
8 வழிச்சாலைத் திட்டம் உறுதியான வளர்ச்சித் திட்டம் என்பதால் ஒரு சிலர் தூண்டுதலின் பேரில் தடை வந்துள்ளது. 8 வழிச்சாலையை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். அப்படி அவர்கள் விரும்பும்போது அதை யாராலும் தடுக்க முடியாது.
ஸ்டாலின் குற்றச்சாட்டுகளை வேட்புமனு தாக்கலின் போதே கூறியிருக்க வேண்டும். கடைசி 3 நாட்கள் அவர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு பதில்சொல்ல முடியாது. தேர்தல் ஆணையம் சோதனை மேற்கொள்ளும் விஷயத்தில் உள் நோக்கம் பின் நோக்கம் எதையும் பார்க்க வேண்டாம்.
குமரி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் ஏற்கனவே இருந்த நாங்குநேரி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. குமரி மக்களுக்கும் எதுவும் செய்யப் போவதில்லை’’ என்று பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.
Also see... அரசியல் ஆரம்பம் | நீட்டைத் தொடர்ந்து எட்டு வழி சாலையிலும் சிக்கலா?
Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.