தமிழகத்தில் தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகள் தீவிரம்!

ராமநாதபுரம், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் துணை ராணுவப் படையினரின் கொடிஅணிவகுப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

Web Desk | news18
Updated: April 17, 2019, 9:29 AM IST
தமிழகத்தில் தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகள் தீவிரம்!
துணை ராணுவப் படையினர்-ராமநாதபுரம்
Web Desk | news18
Updated: April 17, 2019, 9:29 AM IST
மக்களவைத் தேர்தலுக்கான இறுதிகட்ட தயாரிப்பு பணிகளில் தமிழகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்களின் இறுதிகட்ட பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், தேர்தலுக்கான பாதுகாப்பு கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தேர்தல் பாதுகாப்பு பணிகளில், முன்னாள் ராணுவ வீரர்கள், ஓய்வுபெற்ற காவல்துறையினர், ஊர்காவல் படையினர் என சுமார் 5 ,000 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னையில் 1,707 வாக்குப்பதிவு மையங்களில் 7,832 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் 62 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் மொத்தம் 17,000 போலீசார், 7 கம்பெனி துணை ராணுப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி கட்டடத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் அலுவலர் பிரகாஷ், வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணிகள் நாளைக்குள் நிறைவடையும் என்றும் 1,983 மையங்கள் கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளதாகவும்  தெரிவித்தார்.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை சார் ஆட்சியர் சரயூ பார்வையிட்டார். கடலூரில் 4,059 போலீசார், 600 துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும், பதற்றமானவை என கண்டறியப்பட்ட 106 வாக்குச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளதாகவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம்

தேர்தலுக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து பேசிய ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் வீர ராகவ ராவ், தேர்தல் பரப்புரையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். 

நெல்லை

நெல்லையில் 520 வாக்குச் சாவடிகளில் முழுவதும் பெண்களே நிர்வகிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முறை அதிகபட்சமாக 75 சதவீதம் பெண் ஊழியர்கள் தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் 267 வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் தெரிவித்துள்ளார்.

கோவை

கோவையில் வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபேட், மை உள்ளிட்ட பொருட்களை அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வெகு தொலைவில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகளுக்கு இரவிலும், அருகாமையில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு நாளை காலையும் வாகனங்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

நீலகிரி

இதனிடையே, நீலகிரியில் மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் இன்றி மக்கள் வாக்களிப்பதை உறுதி செய்யும் விதமாக, நீலகிரி - கேரளா எல்லையில் 240 கிலோ மீட்டருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகபிரியா தெரிவித்தார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் துணை ராணுவப் படையினரின் கொடிஅணிவகுப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

Also see... வேலூரில் தேர்தல் நடத்தக் கோரி தலைமை தேர்தல் ஆணையருக்கு திமுக வேட்பாளர் கடிதம்!   

ஜோதிமணி மற்றும் செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு!  

Also see... ஓட்டுப்போட சொந்த ஊர் புறப்பட்ட மக்கள்! கோயம்பேட்டில் கூட்டம் அலைமோதியது 


வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதன் முக்கிய காரணமான


Also see... 




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...