• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தலைவராக இருக்க தகுதி இல்லாதவர் ஸ்டாலின்: முதல்வர் பழனிசாமி

தலைவராக இருக்க தகுதி இல்லாதவர் ஸ்டாலின்: முதல்வர் பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

என்னை மண்புழு என்று ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார். விவசாயிகளின் நண்பன் மண்புழு, எனவே நான் விவசாயிகளின் நண்பனாக இருந்து பணியாற்றுவேன் என்று முதல்வர் கூறினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
அதிமுக சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டால், திமுக தலைவர் ஸ்டாலின் கதைகளை சொல்லி வாக்கு கேட்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

நாமக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து, முதல்வர் பழனிசாமி ராசிபுரம், சேந்தமங்கலம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்த முதல்வர் பழனிசாமி, இந்தியாவிலேயே தலைவராக இருக்க தகுதி இல்லாதவர் ஸ்டாலின் எனப் பேசினார்.

அதிமுக-பாஜக கூட்டணி வெற்றிக்குப் பின் காவிரி-கோதாவரி நதிகளை இணைப்பதே முதல் திட்டம் எனக் கூறினார். மேலும் அதிமுக திட்டங்களை பற்றி கதை பேச மட்டுமே ஸ்டாலினுக்கு தெரியும் என குற்றம்சாடினார்.

அதனைத் தொடர்ந்து பேசியவர், திமுக வெற்றி பெற்றால் என்ன செய்வார்கள் என்று ஸ்டாலின் பிரசார மேடைகளில் கூறுவதில்லை என குற்றம்சாட்டினார். மேலும் நடைமுறையில் செய்ய முடியாதவற்றை திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று முதலவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.

என்னை மண்புழு என்று ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார். விவசாயிகளின் நண்பன் மண்புழு, எனவே நான் விவசாயிகளின் நண்பனாக இருந்து பணியாற்றுவேன் என்றும் பேசினார்.

Also see...  அரசியல் ஆரம்பம்: தினகரனுடன் மறைமுக கூட்டணியை விரும்புகிறதா பாஜக

Also see... காலத்தின் குரல்: அதிமுகவை நம்பவில்லையா பாஜக?


Also see... 
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: