சினிமாவில் நடித்தால் முதல்வராகிவிடலாம் என பலர் நினைப்பதாக விமர்சித்த திருநாவுக்கரசர், கட்சியை ஆரம்பித்துவிட்டு கமல்ஹாசன் கஷ்டப்படும் நிலையில், இதெல்லாம் தெரிந்து ரஜினிகாந்த் ஒதுங்கிவிட்டதாக தெரிவித்தார்.
திருச்சி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஒரு சினிமாவில் நடித்தால் முதல்வராகி விடலாம் என்று சிலர் நினைக்கின்றனர். நடிகர் கமல்ஹாசன் பாவம். கட்சியை ஆரம்பித்து விட்டு கஷ்டப்படுகிறார் என்று கூறினார்.
மேலும் கடந்த ஐந்தாண்டில் மோடி ஆட்சியில் நடந்த கொடுமைகளை எண்ணி பார்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் உங்களது பகுதிக்கு மோடி என்ன செய்திருக்கிறார் என்றும் கேள்விக்கேட்டார். சாப்பாட்டுக்கு வரி விதித்தார். இரவோடு இரவாக நமது பணம் செல்லாது என்று அறிவித்தார். அவரது ஆட்சி ஏழைகளுக்கானது இல்லை என்று பேசினார்.
ராகுல் பிரதமரானால் ஏழைகளுக்கு மாதந்தோறும் 6000 ரூபாய் வழங்கப்படும். நூறு நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக அதிமாக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் முதல்வர் கனவோடு சுற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரு சினிமாவில் நடித்தால் முதல்வராகி விடலாம் என்று நினைக்கின்றனர்.
நடிகர் கமல்ஹாசன் பாவம். கட்சியை ஆரம்பித்து விட்டு கஷ்டப்படுகிறார். இதெல்லாம் தெரிந்து தான் என்னவோ நண்பர் ரஜினி ஒதுங்கி கொண்டார். நான் உங்களின் ஆசியோடு வெற்றி பெற்று விடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
Also see...மோடி இனி பிரதமராக முடியாது: முதல்வர் நாராயணசாமி
Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.