Relaxation Lockdown | ஊரடங்கில் இன்று முதல் தளர்வு... காய்கறி, மளிகை கடைகள் திறப்பு

ஊரடங்கு கட்டுப்பாடு

தமிழகத்தில் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்ட ஒரு வார கால ஊரடங்கு இன்று அமலுக்கு வந்துள்ளது.

  • Share this:
    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடந்த 24ம் தேதி அமலுக்கு வந்தது. இது இன்று காலை 6 மணியுடன் முடிவுக்கு வந்த நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை, வரும் 14ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. தொற்று பரவல் அதிகமாக உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு, கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மளிகை, காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்படலாம். அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும், தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொற்று பரவல் குறைவாக உள்ள மற்ற மாவட்டங்களில் மேற்கண்ட தளர்வுகளுடன், மின் பணியாளர்கள், பிளம்பர்கள் ஆகியோர் இ-பதிவுடன் பணிக்கு செல்லலாம் என்றும், ஆட்டோ மற்றும் டாக்சிகளில் இ-பதிவுடன் பயணிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க...கொரோனா வார்டு அருகே 3 மணி நேரமாக சேர் போட்டு அமர்ந்த ஆட்சியர்!

    நீலகிரி, கொடைக்கானல், குற்றாலம் உள்ளிட்ட மலைப்பகுதிகளுக்கு அத்தியாவசிய தேவைகளுக்காக செல்வோர், மாவட்ட ஆட்சியர்களிடம் இ-பாஸ் பெறுவது அவசியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: