திருச்சியில் ரஜினி மக்கள் மன்றத்தினர் 40 பேர் மீது வழக்குப்பதிவு

திருச்சியில் ரஜினி மக்கள் மன்றத்தினர் 40 பேர் மீது வழக்குப்பதிவு

கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதற்காக திருச்சியில் ரஜினி மக்கள் மன்றத்தினர் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதற்காக திருச்சியில் ரஜினி மக்கள் மன்றத்தினர் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் கட்சி தொடங்குவதாக நேற்று அறிவித்தார். அரசியல் கட்சி குறித்த 25 ஆண்டுகளாக காத்திருந்த அவரது ரசிகர்கள், ரஜினியின் நேற்றைய  அறிவிப்பையடுத்து  தொடர்ந்து, திருச்சி ரயில்வே சந்திப்பு அருகே வழிவிடு வேல் முருகன் கோயில் முன்பு ரஜினி ரசிகர்கள் இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து நேற்று மாலை கொண்டாடினர். திருச்சி ரயில்வே சந்திப்பு அருகே மட்டுமின்றி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகேயும்  தில்லை நகர் உள்ளிட்ட இடங்களிலும் ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்து,  இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இந்நிலையில், ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர் கலீல் உள்ளிட்ட 40 பேர் மீது கொரோனா ஊரடங்கை மீறியது, அனுமதியின்றி கூடியது  உள்ளிட்ட பிரிவுகளில் திருச்சி மாநகரம் கண்டோண்ட்மென்ட் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Also read: இனி கோயில்களில் தமிழில் குடமுழுக்கு... உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு சீமான் வரவேற்பு

அரசியல் கட்சிகளைப் பொருத்தவரை திருப்புமுனை திருச்சி என்று கூறி திருச்சியில் முதல் பொதுக்கூட்டம், மாநாடுகளை நடத்துவது வழக்கம். அரசியல் தொடக்கத்திற்கு திருச்சியை சென்டிமென்டாகவும் பார்ப்பார்கள். இந்நிலையில், அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்த ஒரு நாளுக்குள் அவருடைய மக்கள் மன்றத்தினர் மீதான முதல் வழக்கை திருச்சி மாநகரம் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published: