ஊரடங்கில் புதிய தளர்வுகள் இன்று முதல் அமல்... என்ன இயங்கும்? என்ன இயங்காது?

ஊரடங்கு கட்டுப்பாடு

ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டள்ள நிலையில் இன்று முதல் அமலுக்கு வரும் கூடுதல் தளர்வுகள் குறித்து பார்க்கலாம்.

 • Share this:
  தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு இன்று அதிகாலை 6 மணியுடன் முடிவுக்கு வருகிறது. இதனை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதில், கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, புதுச்சேரிக்கான பேருந்து சேவையை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  ஊரடங்கில் தொடரும் தடைகள்

  • மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து (புதுச்சேரி நீங்கலாக)
  • மத்திய  உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்து
  • திரையரங்குகள்
  • அனைத்து மதுக்கூடங்கள்
  • நீச்சல் குளங்கள்
  • பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள்
  • பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள்
  • பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்
  • உயிரியல் பூங்காக்கள்

  • நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

  • இறுதிச் சடங்குகளில், 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

  இன்று முதல் அமலுக்கு வரும் புதிய தளர்வுகள்

  புதுச்சேரிக்கான பேருந்து சேவை தொடங்கப்படுகிறது.

  ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத் தேர்வுகள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இதுகுறித்த விபரங்களை தேர்வு நடத்தும் அமைப்புகள் முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கவேண்டும்.

  உணவகங்கள், தேநீர் கடைகள், அடுமனைகள் (Bakery), நடைபாதைக் கடைகள், இனிப்பு, காரவகை பண்டங்கள் விற்பனை கடைகள்  ஆகியவை வழக்கமான நிபந்தனைகளுக்குட்பட்டு 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

  வழிகாட்டு நடைமுறைகள்

  கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் (hand sanitizer with dispenser) கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்

  கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

  குளிர் சாதன வசதி பயன்படுத்தப்படும் இடங்களில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறக்கப்பட்டு போதுமான காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.

  கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: