• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் சினிமா தியேட்டர்களை திறக்க அனுமதி - முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் சினிமா தியேட்டர்களை திறக்க அனுமதி - முதல்வர் அறிவிப்பு

திரையரங்கு

திரையரங்கு

தமிழகத்தில் 50% பார்வையாளர்களுடன் சினிமா தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

  • Share this:
    தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்தது. தமிழகத்தில் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகமானது. இதனையடுத்து கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பரவல் குறையத் தொடங்கியதையடுத்து பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மூன்றாவது அலை வர வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர், மருத்துவ வல்லுநர்கள் கலந்துக்கொண்டனர்.

    தமிழகத்தில் நாளை மறுநாள் காலையுடன் ஊரடங்கு முடிவடைகிறது. இந்நிலையில் ஊரடங்கை மேலும், இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், புதிய தளர்வுகளையும் அறிவித்துள்ளார்.

    இதையும் படிக்க:  தமிழ்நாட்டில் புதிய தளர்வுகள் என்ன? 

    அதன்படி, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, 50% பார்வையாளர்களுடன் 23ம் தேதி முதல் திரையரங்குகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: