முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்வு... முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்வு... முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

 மு.க.ஸ்டாலின் ஆலோசனை

மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Tamil Nadu Lockdown | திருமணம் மற்றும் இறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் தடையை தளர்த்துவது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

  • Last Updated :

கொரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், திருமணம் மற்றும் இறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் தடையை தளர்த்துவது குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதாரம் தொடர்பான தளர்வுகள் உட்பட இதர தளர்வுகளை அறிவிக்க அபாய மதிப்பீடு அடிப்படையிலான அணுகுமுறையினை (Risk Assessment Based Approach) கடைபிடிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read : அரசு பஸ் தலைகீழாக கவிழ்ந்து விபத்து.. டிரைவர், கண்டக்டர் உட்பட 6 பேர் படுகாயம்

இந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டும், மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக மீட்டெடுக்கவும் ,கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு நடைமுறையில் இருக்கும் தடையை நீக்கவும், 3-3-2022 முதல் 31-3-2022 வரை கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டு வந்த திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளுக்கு 500 நபர்களும், இறப்பு சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 250 நபர்களும் பங்கேற்கலாம் என்ற தடையை நீக்குவது குறித்தும் முதலமைச்சரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

top videos

    மேலும், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் முககவசம் அணிவதற்கான தடையும் முழுமையாக நீக்கப்பட்டுள்ள நிலையில், இதுக்குறித்தும் முதலமைச்சரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்படும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    First published:

    Tags: Corona, Lockdown, MK Stalin