• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆந்திரா, கர்நாடகாவுக்கு செல்ல பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி

ஆந்திரா, கர்நாடகாவுக்கு செல்ல பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி

SETC bus

SETC bus

பெங்களூருவில் ஏராளமான தமிழர்கள் பணியாற்றி வரும் நிலையில், மாநில எல்லையான ஓசூர் வரை மட்டுமே இதுவரையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

  • Share this:
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கை வரும் செப்டம்பர் 6ம் தேதி வரை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ள தமிழக அரசு, ஊரடங்கில் சில முக்கிய தளர்வுகளையும் அறிவித்துள்ளது.

தமிழகத்தின் இரண்டாம் அலை கொரோனா பரவல் கடந்த ஏப்ரலில் அதிகரித்தது. பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னர் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளும் படிப்படியாக கொடுக்கப்பட்டு வருகிறது.

Also Read: தாலிபான்களால் இந்தியர்கள் கடத்தல்?

தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு வரும் ஆக்ஸ்ட் 23ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், அதனை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்திருக்கும் தமிழக அரசு, செப்டம்பர் 6ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது.

ஊரடங்கு தளர்வுகள்:

சினிமா தியேட்களுக்கு அனுமதி, கல்லூரிகள் திறக்க அனுமதி, கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி என பல்வேறு தளர்வுகளை அளித்துள்ள தமிழக அரசு, தடை செய்யப்பட்டிருக்கும் வெளிமாநில பேருந்து சேவைக்கு மீண்டும் அனுமதி வழங்கியிருக்கிறது.

அதன்படி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது பேருந்து போக்குவரத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

Also Read:   தாலிபான்களின் கொட்டத்தை அடக்கிய எதிர்ப்புப் படைகள் – 3 மாவட்டங்கள் மீண்டும் மீட்பு!

இதன் மூலம் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தங்கி பணிபுரிவோர் பெருமகிழ்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக பெங்களூருவில் ஏராளமான தமிழர்கள் பணியாற்றி வரும் நிலையில், மாநில எல்லையான ஓசூர் வரை மட்டுமே இதுவரையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஓசூர், கிருஷ்ணகிரியில் இருந்து தினமும் பெங்களூரு செல்வோரும் கடும் சிரமத்தை சந்தித்தனர். இவர்கள் மாநில எல்லை வரை சென்று அங்கிருந்து நடந்தே கர்நாடக எல்லைக்குள் சென்று பின்னர் அங்கிருந்து பேருந்துகளில் சென்று திரும்பினர்.

 இதையும் படிக்க:  தமிழ்நாட்டில் புதிய தளர்வுகள் என்ன? 

தற்போது இம்மாநிலங்களுக்கு பொதுப் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: