Lockdown Special Bus: லாக்டவுன் சிறப்பு பேருந்துகளில், பயணிகள் அதிகம் இல்லை

Youtube Video

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையில் கூட்டம் அதிக அளவில் காணப்படவில்லை.

  • Share this:
தமிழகத்தில் சிறப்பு பேருந்துள் இயங்கினாலும் பெரும்பாலான இடங்களில் பேருந்து நிலையங்களில் அதிக கூட்டம் காணப்படவில்லை.

தமிழகத்தில் ஊரடங்கு நாளை முடிவடைய இருந்த நிலையில், அடுத்த ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் சொந்த ஊருக்குச் செல்வோருக்கு வசதியாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்தது. சென்னையில் இருந்து 1500 சிறப்பு பேருந்களும், மற்ற மதுரை, திருப்பூர், கோவை உள்ளிட்ட நகரங்களில் 3 ஆயிரம் பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

பொதுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள், அவசர, அவசரமாக வரவழைக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையில் கூட்டம் அதிக அளவில் காணப்படவில்லை.

நேற்றிரவைக் காட்டிலும் கூட்டம் சற்றே அதிகரித்திருந்தாலும், பெரும்பாலான பேருந்துகள் காலியாகவே இயக்கப்பட்டன. முகக்கவசம் அணியாத பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.
Published by:Yuvaraj V
First published: