900 குடும்பங்களுக்கு தலா அரை கிலோ சிக்கன் வழங்கி அசத்திய ம.தி.மு.க நிர்வாகி

900 குடும்பங்களுக்கு தலா அரை கிலோ சிக்கன் வழங்கி அசத்திய ம.தி.மு.க நிர்வாகி

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சிக்கன் வழங்கும் மதிமுக நிர்வாகி.

தக்காளி முதல் தேங்காய் வரை தினமும் ஒன்றாக வழங்கி வந்த நிலையில், இன்று அப்பகுதி மக்களுக்கு அரை கிலோ சிக்கன் வழங்கி அசத்தியுள்ளார்.

  • Share this:
கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மதிமுக நிர்வாகி சரவணன் என்பவர் ஊரடங்கு அறிவித்தது முதல் நேற்று வரை கோவில்பட்டி 23வது வார்டு பகுதியான ஜமீன் பேட்டை தெரு, பெரியார் தெரு, கோபால்செட்டி தெரு, சரமாரியம்மன் கோவில் தெரு, இரட்டை விநாயகர் கோவில் தெரு பகுதியில் வசிக்கும் 900 பேருக்கு தினமும் ஒரு காய் என்று வழங்கி வந்தார்.

தக்காளி முதல் தேங்காய் வரை தினமும் ஒன்றாக வழங்கி வந்த நிலையில், இன்று அப்பகுதி மக்களுக்கு அரை கிலோ சிக்கன் வழங்கி அசத்தியுள்ளார். 450 கிலோ சிக்கன் வாங்கி அதனை அரை கிலோவாகப் பிரித்து 900 பேருக்கு வழங்கியுள்ளார். தினமும் காய் வழங்கப்பட்ட நிலையில் இன்று சிக்கன் வழங்கப்பட்டதால் மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Also see:
Published by:Rizwan
First published: