ஊரடங்கு விதிகளை மீறி திருமணம்: மணமகனின் தந்தை உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு..

சிதம்பரத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி திருமணம் நடத்தியதால் மணமகனின் தந்தை உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

ஊரடங்கு விதிகளை மீறி திருமணம்: மணமகனின் தந்தை உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு..
மாதிரிப் படம்
  • Share this:
சிதம்பரம் அருகே ஊரடங்கை மீறி திருமணம் நடத்தியதாக மணமகனின் தந்தை உட்பட 9 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. வண்டி கேட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று ஊரடங்கை மீறி திருமணம் நடைபெறுவதாகவும், முகக்கவசம் கூட அணியாமல் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருப்பதாகவும் தகவல் வெளியானது.

Also see:இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், திருமணம் முடிந்து உணவருந்துவதற்காக காத்திருந்த அனைவரையும் கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர்.

திருமண மண்டப மேலாளரை அழைத்து எச்சரித்ததுடன், ஊரடங்கை மீறி திருமணம் நடத்தியதாக மணமகனின் தந்தை இளங்கோவன், அறிவழகன் உட்பட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
First published: July 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading