• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஊரடங்கு: மானாமதுரையில் இரண்டாயிரம் ரூபாய் செலவில் நடந்த திருமணம்!

ஊரடங்கு: மானாமதுரையில் இரண்டாயிரம் ரூபாய் செலவில் நடந்த திருமணம்!

கண்ணன், பிரியா.

கண்ணன், பிரியா.

மானாமதுரை விநாயகர் கோயிலில் நடந்த இந்த திருமணத்தில் 6 பேர் மட்டுமே கலந்துகொண்டனர்.

  • Share this:
தமிழகத்தின் பல பகுதிகளில் ஊரடங்கையொட்டி எளிய முறையில் திருமணம் நடந்து வருகின்றன. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இன்று வெறும் இரண்டாயிரம் ரூபாய் செலவில் திருமணம் நடந்துள்ளது.

மானாமதுரை குண்டுராயர் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் (27). மதுரை அலங்காநல்லூரைச் சேர்ந்தவர் பிரியா (21). கால் டாக்சி டிரைவரான கண்ணன் மூன்று வருடங்களாக பிரியாவைக் காதலித்து வந்துள்ளார். இரு வீட்டார் பேச்சுவார்த்தை நடத்தியபோது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தால் திருமண தேதி முடிவு செய்ய முடியாமல் தவித்துள்ளனர். இந்நிலையில் இருவீட்டாரைச் சேர்ந்த ஐந்து பேருடன் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு, இன்று மானாமதுரை விநாயகர் கோயிலில் மாலை மாற்றி திருமணம் நடந்தது.

பெண் வீட்டார் இரண்டு பேர், மாப்பிள்ளை வீட்டார் மூன்று பேர், மணமக்கள் இரண்டு பேர் என மொத்தம் ஏழு பேர் கலந்துகொள்ள திருமணம் நடந்தது. மாலை, திருமாங்கல்யம், அர்ச்சனை உள்ளிட்ட அனைத்தும் சேர்ந்து வெறும் இரண்டாயிரம் ரூபாய் செலவில் திருமணம் இனிதாக நடந்து முடிந்தது. வீட்டில் இருந்து நடந்து சென்று திருமணம் முடிந்து மீண்டும் வீட்டிற்கு நடந்தே வந்து விட்டனர். வீட்டின் அருகில் உள்ள விநாயகர் கோயில் என்பதால் வேறு எந்த செலவும் இல்லை. ஊரடங்கு உத்தரவு முடிந்த பின் உறவினர்களுக்கு அழைப்பு விடுத்து வரவேற்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: