Home /News /tamil-nadu /

பள்ளிகளில் மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்... நேரடி வகுப்பு நடத்த தடை

பள்ளிகளில் மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்... நேரடி வகுப்பு நடத்த தடை

Tamil Nadu Lockdown: தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பை தடுக்கும் வகையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் இந்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

    தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவி வரும் உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும் மற்றும் பொது மக்கள் நலன் கருதியும் பின்வரும் கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிடப்படுகிறது.

    மாநிலம் முழுவதும் 6.1.2022 முதல் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படும். இந்த நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவை செயல்பட அனுமதி இல்லை.

    எனினும், இந்த இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாட்டின் போது பின்வரும் அத்தியாவசியச் செயல்பாடுகள் மட்டும் அனுமதிக்கப்படும்.

    இதர கட்டுப்பாடுகள்

    1) மழலையர் காப்பகங்கள் (Creche) தவிர, மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் (Play Schools), நர்சரிப் பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை.

    2) அனைத்துப் பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது.

    3) பொதுத் தேர்வுக்குச் செல்லும் மாணவர் கல்வி மற்றும் எதிர்கால நலன் மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாக 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும்.

    4) அரசு, தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகள் தவிர அனைத்துக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணாக்கர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜனவரி 20ஆம் தேதி வரை விடுப்பு அளிக்கப்படுகிறது.

    5) பயிற்சி நிலையங்கள் (Training and Coaching Centres) செயல்படத் தடை விதிக்கப்படுகிறது.

    Also read: தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு... எவற்றுக்கு அனுமதி? எவற்றுக்கு தடை?
    Published by:Esakki Raja
    First published:

    Tags: CoronaVirus, Lockdown, MKStalin, Omicron

    அடுத்த செய்தி