தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு - என்ன இயங்கும்? என்ன இயங்காது?

கடற்கரை

சினிமா தியேட்களுக்கு அனுமதி, கல்லூரிகள் திறக்க அனுமதி, கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி என பல்வேறு தளர்வுகளை அளித்துள்ள தமிழக அரசு, தடை செய்யப்பட்டிருக்கும் வெளிமாநில பேருந்து சேவைக்கு மீண்டும் அனுமதி வழங்கியிருக்கிறது.

 • Share this:
  தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கை வரும் செப்டம்பர் 6ம் தேதி வரை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ள தமிழக அரசு, ஊரடங்கில் சில முக்கிய தளர்வுகளையும் அறிவித்துள்ளது.

  தமிழகத்தின் இரண்டாம் அலை கொரோனா பரவல் கடந்த ஏப்ரலில் அதிகரித்தது. பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னர் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளும் படிப்படியாக கொடுக்கப்பட்டு வருகிறது.

  தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு வரும் ஆக்ஸ்ட் 23ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், அதனை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்திருக்கும் தமிழக அரசு, செப்டம்பர் 6ம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது.

  Also read: ஊரடங்கு தளர்வு: இந்த மாநிலங்களுக்கு இனி பேருந்து சேவைக்கு அனுமதி!

  ஊரடங்கு தளர்வுகள்:

  சினிமா தியேட்டர்களுக்கு அனுமதி, கல்லூரிகள் திறக்க அனுமதி, கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி என பல்வேறு தளர்வுகளை அளித்துள்ள தமிழக அரசு, தடை செய்யப்பட்டிருக்கும் வெளிமாநில பேருந்து சேவைக்கு மீண்டும் அனுமதி வழங்கியிருக்கிறது.

  எதற்கெல்லாம் அனுமதி என்பதை விரிவாக பார்க்கலாம்.

  அனைத்து கல்லூரிகளும் செப் 1 முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும்.

  அனைத்து பட்டயப் படிப்பு வகுப்புகளும் (Diploma courses, polytechnic colleges) செப் 1 முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும்.

  50% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்படும்.

  கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர்

  உயிரியியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் செயல்பட அனுமதி.

  இதுவரை இரவு 09.00 மணி வரை அனுமதிக்கப்பட்ட அனைத்து கடைகள் மற்றும் செயல்பாடுகளும் 23-8-2021-லிருந்து இரவு 10.00 மணி வரை செயல்பட அனுமதி

  தகவல் தொழில்நுட்பம் / தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதி

  அங்கன்வாடி மையங்கள் 1.9.2021 முதல் மதிய உணவு வழங்குவதற்காக செயல்பட அனுமதிக்கப்படும்.

  ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி

  நீச்சல் குளங்கள் விளையாட்டு பயிற்சிகளுக்காக மட்டும் 50% பயிற்சியாளர்களுடன் அனுமதி

  மழலையர் காப்பகங்கள் (Creche) செயல்பட அனுமதிக்கப்படும்.

  இதையும் படிங்க:  தமிழ்நாட்டில் புதிய தளர்வுகள் என்ன? 

  தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மகளிர் மேம்பாட்டு கழகம் மூலம் நடத்தப்படும் வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்புகளுக்கு அனுமதி

  தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்கள் (FL 2, FL 3) செயல்பட அனுமதிக்கப்படும்.
  Published by:Arun
  First published: