முழு ஊரடங்கு அச்சம்: சொந்த ஊர் செல்ல தொடங்கிய வடமாநில தொழிலாளர்கள்

Youtube Video

கடந்த முறை திடீரென ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தொழிலாளர்கள் ஏராளமானோர் நடந்துச்சென்று சொந்த ஊர் சேர்ந்த நிலையில், அந்த நிலை மீண்டும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் ரயில் நிலையங்களில் குவியத் தொடங்கியுள்ளனர்.

 • Share this:
  முழு ஊரடங்கு அச்சத்தால் வடமாநில தொழிலாளர்கள் பெரும்பாலானோர் சொந்த ஊர் திரும்ப தொடங்கியுள்ளனர்.

  தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு பத்தாயிரத்தை கடந்துள்ள நிலையில், தமிழக அரசு நாளை முதல் இரவு ஊரடங்கை அறிவித்துள்ளது. இதனால் பீகார், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பணி செய்ய வந்த ஏராளமான தொழிலாளர்கள் ரயில்கள் மூலம் மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.

  கடந்த முறை திடீரென ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தொழிலாளர்கள் ஏராளமானோர் நடந்துச்சென்று சொந்த ஊர் சேர்ந்த நிலையில், அந்த நிலை மீண்டும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் ரயில் நிலையங்களில் குவியத் தொடங்கியுள்ளனர்.

  சென்னை, திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் பணிபுரியும் ஏராளமான தொழிலாளர்கள் ரயில் நிலையங்களில் காத்திருக்கின்றனர். இரவு நேரத்தில் செல்லக்கூடிய ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்தவர்கள் காலை முதலே ரயில் நிலையங்களில் காத்திருக்கின்றனர்.

  இதேபோல், கோவை மாவட்டத்திலும் தொழிற்சாலைகள், உணவகங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர்.

  புதிய கட்டுப்பாடுகள் காரணமாக வேலை வாய்ப்பு பறிபோகும் அச்சத்தால் சொந்த ஊர் செல்வதாக வடமாநில தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். கோவையில் இருந்து பீகார் மாநிலம் தன்பாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்ல ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.
  Published by:Yuvaraj V
  First published: