முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மால்களுக்கு Yes.. திரையரங்குகளுக்கு No.. சென்னை டூ செங்கல்பட்டு மாவட்டங்களில் ஊரடங்கில் என்னென்ன புதிய தளர்வுகள்?

மால்களுக்கு Yes.. திரையரங்குகளுக்கு No.. சென்னை டூ செங்கல்பட்டு மாவட்டங்களில் ஊரடங்கில் என்னென்ன புதிய தளர்வுகள்?

மாதிரி படம்

மாதிரி படம்

வணிக வளாகங்கள் (Shopping Complex / Malls) காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். எனினும், வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் பார்சல் உணவு மட்டும் அனுமதிக்கப்படும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழகத்தில் ஏற்கனவே அமலில் இருந்து வரும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் சில தளர்வுகளுடன் ஜூலை மாதம் 5ம் தேதி வரை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலின் இரண்டாம் அலையின் காரணமாக கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பின்னர் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னர் நோய் பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்ததையடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அது ஒவ்வொரு வாரமாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் ஜூன் 28ம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைய இருந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 5ம் தேதி காலை 6 மணி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நோய் பரவலை கருத்தில் கொண்டு கடந்த வாரம் 3 வகையாக மாவட்டங்கள் பிரித்து அதற்கேற்றவாறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. தற்போது மேலும் சில புதிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் பொதுப் போக்குவரத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Also Read:   ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டிப்பு: இ-பாஸ் யாருக்கெல்லாம் வேண்டும்?

மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பாதிப்பின் அடிப்படையில், ஏற்கனவே மாவட்டங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

வகை 1 - (11 மாவட்டங்கள்)

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள்

வகை 2 - (23 மாவட்டங்கள்)

அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்.

வகை 3 - (4 மாவட்டங்கள்)சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்

Also Read:  2வது மனைவியை இஸ்லாமுக்கு கட்டாய மதமாற்றம் செய்துவிட்டனர்: கிறிஸ்துவ நபரின் பரபரப்பு குற்றச்சாட்டு!

வகை 3-ல் உள்ள மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுக்கான நேரத் தளர்வுகளுடன் கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

அனைத்து தனியார் நிறுவனங்கள், 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

அனைத்துக் துணிக்கடைகள், குளிர் சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

அனைத்து நகைக்கடைகள், குளிர் சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

வணிக வளாகங்கள் (Shopping Complex / Malls) காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். எனினும், வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் பார்சல் உணவு மட்டும் அனுமதிக்கப்படும்.

திரையரங்குகள் மற்றும் விளையாட்டுக் கூடங்களுக்கு அனுமதி இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், தர்காக்கள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். அர்ச்சனை, திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை.

காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும், பார்வையாளர்கள் இல்லாமல், திறந்த வெளியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும், அனுமதிக்கப்படும்.

First published:

Tags: Chengalpet, Chennai, Lockdown, Shopping malls, Theatre