தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு

மாதிரிப் படம்

மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்பு தொடர்பான எழுத்து தேர்வுகள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடத்த அனுமதி.

 • Share this:
  தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகள் உடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

  இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 12-ம் தேதி உடன் முடிவடைய உள்ள நிலையில் 19-7-2021 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

  ஊரடங்கில் தடை

  மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து (புதுச்சேரி தவிர்த்து)

  மத்திய உள்துறை அமைச்சக்கத்தால் அனுமதிக்கப்பட்ட வழிதடங்களை தவிர சர்வசேத விமான போக்குவரத்து

  திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம் அரசியல் சார்ந்த கூட்டங்கள்

  பொதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், உயிரியில் பூங்காங்கள் ஆகியவற்றுக்கான தடை தொடரும்.

  மேலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகள் 12-7-2021 முமல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

  கூடுதல் தளர்வுகள்

  புதுச்சேரி பேருந்து சேவை தொடங்கப்படுகிறது.

  மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்பு தொடர்பான எழுத்து தேர்வுகள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடத்த அனுமதி

  உணவகங்கள், தேநீர் கடைகள், அடுமனைகள், நடைபாதை கடைகள், இனிப்பு, காரவகை பண்டங்கள் விற்பனை கடைகள் ஆகியவை வழக்கமான நிபந்தனைகளுக்குட்பட்டு 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: