கோவில் திருவிழா நடத்த அனுமதி இல்லை... ஊரடங்கு தொடரும்: தமிழக அரசு அறிவிப்பு

கோயில் திருவிழா

கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தளர்வுகள் இன்றி ஊரடங்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், கோவில் திருவிழாக்களை நடத்த விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்கிறது.

 • Share this:
  தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் இன்றி ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

  இது தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பில், கூடுதலாக எவ்வித தளர்வுகளுமின்றி 31-7-2021 முதல் 9-8-2021 காலை 6.00 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

  கடந்த சில வாரங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நகரங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் பொது மக்கள் அதிகம் கூடுவதும் அதனால் நோய்த் தொற்று பரவல் அபாயம் ஏற்பட்டு வருவதும் விவாதிக்கப்பட்டது.

  Also read: தூத்துக்குடி அருகே டீ குடிக்க வெளியே சென்ற வாலிபர் தலை துண்டித்து படுகொலை

  மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் சரியான முறையில் பின்பற்றப்படாவிட்டால் அதன் விளைவுகள் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும். எனவே, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

  மேலும், சில குறிப்பிட்ட பகுதிகளில் அதிக அளவில் கூட்டம் சேருவது தொடர்ந்து காணப்பட்டால் அப்பகுதி மாவட்ட ஆட்சியர்கள் / மாநகராட்சி ஆணையர்கள், காவல் துறையினர் அப்பகுதியை மூடும் நடவடிக்கைகளை பொதுமக்கள் நலன்கருதி முடிவு செய்யலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், இன்றைய அறிவிப்பில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தளர்வுகள் இன்றி ஊரடங்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், கோவில் திருவிழாக்களை நடத்த விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்கிறது.

  ஏற்கனவே வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் திருவிழா, குடமுழுக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த அரசு அனுமதி வழங்கவில்லை.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஆடி மாதம் என்பதால் பல்வேறு இடங்களில் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் நடப்பது வழக்கம். கொரோனா பெருந்தொற்று தடுப்புக்காக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டும் திருவிழாக்கள் அனுமதி கிடையாது.
  Published by:Esakki Raja
  First published: