• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Lockdown Extended | எதற்கெல்லாம் அனுமதி, எதற்கெல்லாம் தடை தொடரும்? முழு விவரம்!

Lockdown Extended | எதற்கெல்லாம் அனுமதி, எதற்கெல்லாம் தடை தொடரும்? முழு விவரம்!

டாஸ்மாக் கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு வரும் 5ம் தேதி காலையுடன் நிறைவடையும் நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் 12.7.21 வரை மேலும் ஒரு வாரம்  நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, 5.07.21 முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள் வழங்கப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, அனைத்து பகுதிகளிலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும், ஏற்கனவே இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகள் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய இ-பாஸ், இ-பதிவு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    எதற்கெல்லாம் அனுமதி?

    அரசு, மற்றும் தனியார் தொழில் சார்ந்த பொருட்காட்சி நிகழ்வுகள் நடத்த அனுமதி.

    உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் உள்ள உணவகங்களில் காலை 6.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை, 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதி.

    தேநீர் கடைகளில் நிலையான வழிகாட்டுமுறைகளை பின்பற்றி ஒரு நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் தேநீர் அருந்த அனுமதி.

    கேளிக்கை விடுதிகளில் உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுக்கள் மற்றும் உணவகங்கள் மட்டும் செயல்பட  அனுமதி.

    தகவல் தொழில் நுட்பம் / தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதி.

    தங்கும் விடுதிகள், உறைவிடங்கள், விருந்தினர் இல்லங்கள் செயல்பட அனுமதி.

    அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ் வைப்பகங்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதி.

    உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் செயல்பட அனுமதி.

    டாஸ்மாக் கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை செயல்பட அனுமதி.

    அனைத்து வழிபாட்டுத் தலங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி.

    அனைத்துக் துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள், 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி.

    வணிக வளாகங்கள் (Shopping Complex / Malls) காலை 9.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை செயல்பட அனுமதி.

    வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் 50% இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதி.

    மாவட்டத்திற்குள்ளேயும், மாவட்டங்களுக்கிடையேயும், பொது பேருந்து போக்குவரத்து,50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி.

    SRF/JRF, M.Phil., Phd., ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் கல்வி சார்ந்த பணிகளை (Educational Project Works) தொடர்புடைய கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ள அனுமதி.

    அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம், SIRD போன்ற அரசு பயிற்சி நிலையங்கள்/மையங்கள், செயல்பட அனுமதி.

    பொழுதுபோக்கு / கேளிக்கை பூங்காக்கள்  50% வாடிக்கையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதி.

    எதற்கெல்லாம் தடை தொடரும்?

    மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து

    மத்திய  உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்து
    திரையரங்குகள்

    அனைத்து மதுக்கூடங்கள்

    நீச்சல் குளங்கள்

    பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த
    கூட்டங்கள்

    பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள்

    பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்

    உயிரியல் பூங்காக்கள்

    நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

    இறுதிச் சடங்குகளில், 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: