• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Lockdown Marriage: முழு ஊரடங்கு அறிவிப்பால் அட்வான்ஸாக இன்றே நடந்த திருமணங்கள்!

Lockdown Marriage: முழு ஊரடங்கு அறிவிப்பால் அட்வான்ஸாக இன்றே நடந்த திருமணங்கள்!

Youtube Video

இரவு 9 வரை தளர்வு அறிவிக்கப்பட்டதால் ஏற்கனவே நிச்சயக்கப்பட்ட திருமணத்தை இன்றே அவசர அவசரமாக நடத்தினர்.

  • Share this:
    கொரோனா முழு ஊரடங்கு அறிவிப்பு காரணமாக, நெல்லை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் திட்டமிட்ட முகூர்த்த நாளுக்கு முன்பே இன்று எளிமையாக திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    திங்கட்கிழமை முதல் கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. ஏற்கனவே 50 பேருக்கும் குறைவானவர்களே திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. அதேவேளையில், திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக இ-பதிவு பெறுவதிலும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டடது.

    இந்நிலையில், வருகின்ற 24, 26, 28 மற்றும் 30 ஆகிய முகூர்த்த நாட்களில் நடைபெற இருந்த திருமண நிகழ்ச்சிகளில் உறவினர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், திட்டமிட்ட முகூர்த்த நாளுக்கு முன்பே திருமணம் செய்ய, பெரும்பான்மையினர் முடிவு செய்தனர்.

    இந்நிலையில், இரவு 9 வரை தளர்வு அறிவிக்கப்பட்டதால் ஏற்கனவே நிச்சயக்கப்பட்ட திருமணத்தை இன்றே அவசர அவசரமாக நடத்தினர். இதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் திம்மராஜபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் - முத்துலட்சுமி தம்பதிகளின் மகள் சத்தியகுமாரியின் திருமணம், அங்குள்ள வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் எளிமையாக நடைபெற்றது. இதில், 10-க்கும் குறைவானவர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.



    இதேபோன்று, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதிகளில் திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெற இருந்த திருமணங்கள் இன்றே நடத்தி முடிக்கப்பட்டன. ஏற்கனவே பத்திரிகை வழங்கப்பட்ட போதும், வாட்ஸ்அப் மற்றும் செல்போன் மூலம் அவசரவ அழைப்பு விடுத்து குறைந்த அளவிலான உறவினர்களுடன் திருமணம் நடைபெற்றது.

    மேலும், கோயில்கள் மூடப்பட்டுள்ளதால், கோயில் வாசல்கள், வீடுகளுக்குள்ளேயேயும் திருமணத்தை நடத்தும் நிலை ஏற்பட்டது.

    தளர்வுகள் அற்ற ஊரடங்கு அறிவிப்பால் திட்டமிட்டபடி திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க முடியுமா என்ற கேள்வி எழுந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். ஆனால், இரு நாட்களுக்கு தளர்வு அறிவித்ததுடன், பேருந்துகள் இயக்கப்பட்டதால் முன்கூட்டியே முகூர்த்தத்தில் நடைபெற்ற திருதிருமணத்தில் பங்கேற்றது மகிழ்ச்சியளிப்பதாக கூறினர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Yuvaraj V
    First published: