கடலூர் டிஎஸ்பி தனது சொந்த ஒருமாத ஊதியத்தில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் இருக்கும் 500 காவலர்களுக்கு காய்கறிகளை வழங்கியுள்ளார்.
கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல்நால் தொடங்கி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் அவர்களின் அறிவுரையின்பேரில் கொரானா தடுப்பு பாதுகாப்பு பணியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
இந்த நிலையில் கடலூர் உட்கோட்டத்தை பொறுத்தளவில் 18 நாட்களாக இரவு, பகல் என 3 சுழற்சி முறையில் காவலர்கள், போக்குவரத்து காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், ஊர்காவல் படையினர் என சுமார் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளார்கள்.
இவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக 3 வேளையும் உணவு மற்றும் தேநீர், நீர்மோர், சுக்குக்காபி போன்றவை அவ்வப்போது வழங்கப்பட்டு வந்தன. இதனைத் தொடர்ந்து பணியில் இருக்கும் போலீசாரின் குடும்பத்தை உணர்ந்த கடலூர் டிஎஸ்பி சாந்தி தனது ஒரு மாத ஊதியத்தில் இருந்து காவலர்கள், போக்குவரத்து காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், ஊர்காவல் படையினர், தன்னார்வ தொண்டர்கள் ஆகியோரை ஊக்குவிக்கும் விதமாக ஒருவாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் பொருட்களை வாங்கி, சுமார் 500 காவலர்களுக்கு இன்று வழங்கினார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CoronaVirus, Cuddalore, Lockdown