Lockdown: மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

திங்கட்கிழமை முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலாவதால், மாவட்ட ஆட்சியர்கள் உடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

  • Share this:
    முழு ஊரடங்கின் போது பால், காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு கிடைப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    திங்கட்கிழமை முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலாவதால், மாவட்ட ஆட்சியர்கள் உடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

    அப்போது பேசிய அவர், கொரோனா பெருந்தொற்று மற்றும் நிதி பற்றாக்குறை என இரு பேரிடர்களை சந்தித்து வரும் நிலையில், பாதுப்பான சமூகத்தை உருவாக்கவே தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது என்றார்.

    ஊரடங்கு விதிகளை அனைவரும் தவறாமல் பின்பற்றுவதையும், ஆக்சிஜன் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் கையிருப்பில் உள்ளதை தொடர்ந்து கண்காணிக்கவும், தடுப்பூசி போடும் பணிகள் தொய்வின்றி நடப்பதையும் ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    விழிப்புணர்வு காரணமாக சென்னை, கோவையில் 30 சதவீதத்தினர் தடுப்பூசி போட்டுள்ளதாகவும், அதேவேளை நெல்லை, நாகை, திருவண்ணாமலை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 5 சவீதத்தினர் கூட தடுப்பூசி போடவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

    எனவே, தடுப்பூசியின் அவசியம் குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார்.

    மேலும், கொரானா ஒழிப்பு பணிகளில் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல்துறை அதிகாரிகள், வட்டார செயல் அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் முதலமைச்சர் வலியுறுத்தினார்.
    Published by:Yuvaraj V
    First published: