Relaxation | பார், பள்ளி, கல்லூரி திறக்க தடை நீட்டிப்பு - நாளை முதல் புதுச்சேரிக்கு பேருந்து சேவை

Youtube Video

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரிக்கு பேருந்து சேவை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு நாளை திங்கட்கிழமை அதிகாலை 6 மணியுடன் முடிவுக்கு வருகிறது. இதனை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதில், கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, புதுச்சேரிக்கான பேருந்து சேவையை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    மத்திய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத் தேர்வுகளை அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. உணவகங்கள், தேநீர் கடைகள், அடுமனைகள், நடைபாதைக் கடைகள், இனிப்பு, காரவகை பண்டங்கள் விற்பனை கடைகள் ஆகியவை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணிவரை செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல, ஏற்கனவே இரவு 8 மணிவரை செயல்பட அனுமதிக்கப்பட்ட கடைகள், இரவு 9 மணிவரை செயல்படலாம். அதேநேரம், புதுச்சேரி தவிர மற்ற மாநிலங்களுக்கு இடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் படிக்க... பொதுச்செயலாளர் வழக்கு.. முனைப்பு காட்டும் சசிகலா.. அடுத்தது என்ன?

    திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், பொதுமக்கள் கலந்துகொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கு தடை நீடிக்கிறது. பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், பள்ளி மற்றும் கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள் செயல்பட தடைநீடிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருமண நிகழ்வுகளில் 50 பேரும், இறுதிச்சடங்குகளில் 20 பேரும் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
    Published by:Vaijayanthi S
    First published: