Home /News /tamil-nadu /

Tamilnadu Localbody Election : ஒரு ஓட்டு வித்தியாசத்தில் திமுகவை தோற்கடித்த பாஜக...

Tamilnadu Localbody Election : ஒரு ஓட்டு வித்தியாசத்தில் திமுகவை தோற்கடித்த பாஜக...

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாஜக வேட்பாளர் ஒருவர் ஒரேயொரு ஓட்டு வித்தியாசத்தில் திமுகவை தோற்கடித்துள்ளார்.

    தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு கடந்த 19ஆம் சனிக்கிழமையன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

    மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

    இதில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணியில் தமிழக காவல்துறையினர், அரசு அலுவலர்கள் என சுமார் 40 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளார்கள்.

    இதையும் படிங்க - ஓபிஎஸ் தொகுதியில் அதிமுக படுதோல்வி : திமுக அமோக வெற்றி

    இதில், கரூர் மாவட்டம் பழைய ஜெயம்கொண்ட சோழபுரம் பேரூராட்சியில், 3வது வார்டில் போட்டியிட்ட வேட்பாளர் கோபிநாத், திமுக வேட்பாளரை விட ஒரேயொரு வாக்கு அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    இதையும் படிங்க -  தமிழகத்தில் 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றுகிறது... அதிமுக வாஷ் அவுட்..

    இதனிடையே சென்னை மாநகராட்சி தேர்தலில் 134-வது வார்டில் பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி பெற்றுள்ளார். உமா ஆனந்தன் 134-வது வார்டில் 5539 வாக்குகளை பெற்றுள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து நின்ற அவர் சுமார் 2036 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    தபால் வாக்குகள் முதலே பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் முன்னிலையில் இருந்தார். மேற்கு மாம்பலத்தில் பாஜகவிற்கு வலுவான வாக்கு வங்கியை பெற்றுள்ளது. அதேப்போன்று சென்னை மாநகராட்சியில் பல இடங்களில் பாஜக 2-ம் இடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Musthak
    First published:

    Tags: BJP, DMK, Local Body Election 2022

    அடுத்த செய்தி