பஸ் ஸ்டிரைக்குக்கு இடையே, புறநகர் ரயில் சேவையும் முடங்கியதால் பொதுமக்கள் கடும் அவதி

பஸ் ஸ்டிரைக்குக்கு இடையே, புறநகர் ரயில் சேவையும் முடங்கியதால் பொதுமக்கள் கடும் அவதி

மின்சார ரயில்

சென்னை தாம்பரம் அருகே மின்சார ரயில் பாதையில் உயரழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததால் தாம்பரம்- கடற்கரை இடையேயான மின்சார ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழக அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் 14 வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி அரசுக்கு எதிராக இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் அறிக்கை விடுத்திருந்தன. தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்காத தமிழக அரசு, பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அனைத்து தொழிலாளர்களும் பணிக்கு வரவேண்டும் என்றும் பணிக்கு வராத தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என்றும் அரசு எச்சரிக்கை விடுத்தது. ஆனால், தொழிலாளர்கள் அறிவித்தபடி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக பெரும்பாலான அரசு பேருந்துகள் ஓடவில்லை. இதனால், இன்று காலை வேலைக்கு செல்லும் பொதுமக்கள் உட்பட பலரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், சென்னை தாம்பரம் அருகே மின்சார ரயில் பாதையில் உயரழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததால் தாம்பரம்- கடற்கரை இடையேயான மின்சார ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை தாம்பரம் ரயில் நிலையம் அருகே உள்ள மின்சார ரயில் பாதையில் அதிகாலை 5:30 மணிக்கு உயரழுத்த மின் கம்பி அறுந்து விழுந்தது. இதன் காரணமாக தாம்பரம் - கடற்கரை இடையே ஒன்று, இரண்டு மற்றும் மூன்று ஆகிய தடங்களில் இருமார்க்கமாக இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. தகவலறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள், புதிய மின்கம்பியை பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும் பயணிகளின் நலன் கருதி தாம்பரம் ரயில்நிலையத்தின் 5 மற்றும் 6வது நடைமேடைகளில் இருந்து குறைந்த அளவிலான மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வருவதால், தற்போது மின்சார ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அலுவலகத்திற்கு செல்லும் ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Ram Sankar
    First published: