முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மசாஜ் நிலையங்களில் விபச்சாரம் நடந்தால்... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மசாஜ் நிலையங்களில் விபச்சாரம் நடந்தால்... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Massage Parlors | மசாஜ் நிலையங்களில் விபச்சாரம் நடப்பதாக புகார் வந்தால்  சோதனை நடத்த உள்ளூர் போலீசாருக்கும் அதிகாரம் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை விளக்கமளித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சென்னை அண்ணாநகரில் உள்ள (வில்லோ ஸ்பா) மசாஜ் நிலையத்தில்  விபச்சாரம் நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில், அண்ணாநகர் போலீசார் அதிரடி சோதனை  நடத்தினர். இதில் உரிமையாளர் ஹேமா ஜூவாலினி உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மசாஜ் நிலையத்தின் உரிமையாளர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,    காவல்துறையின் புலன் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த இடைக்கால உத்தரவை ரத்து செய்யக்கோரி காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது மசாஜ் உரிமையாளர்  தரப்பில், சோதனையின் போது காவல்துறை உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை என்றும் ஏற்கனவே மசாஜ் நிலையங்களில் சோதனை நடத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை முறையாக பின்பற்றப்படவில்லை என வாதிடப்பட்டது.

Also Read : ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் இந்த விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும்!

மேலும், விபச்சார தடுப்பு சிறப்பு அதிகாரிக்குதான் சோதனை நடத்த உரிமை உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, சோதனை தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் உரிய நடைமுறைகளை பின்பற்ற வில்லை என்பதற்காக வழக்கை ரத்து செய்ய முடியாது என வாதிட்டார்.

மேலும் கடந்த 1987ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவில் உள்ளூர் காவல் நிலைய  அதிகாரிகளும் சோதனை நடத்துவதற்கான அதிகாரம் உள்ளது என்றும் விளக்கமளித்தார். நியாயமாய் தொழில் நடத்தும் உரிமையில் காவல் துறை தலையிடாது, ஆனால் தவறு நடக்கும் பட்சத்தில், அப்பாவி பெண்கள் பாதிக்கப்படும் போது காவல்துறை வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது எனவும் தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல்   நீதிபதி தள்ளி வைத்தார்.

First published:

Tags: Body massage, Chennai High court, Madras High court