• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • உள்ளாட்சித் தேர்தலில் குளறுபடி: 2 இடங்களில் திங்கட்கிழமை மறு வாக்குப்பதிவு

உள்ளாட்சித் தேர்தலில் குளறுபடி: 2 இடங்களில் திங்கட்கிழமை மறு வாக்குப்பதிவு

உள்ளாட்சித் தேர்தல்

உள்ளாட்சித் தேர்தல்

உள்ளாட்சித் தேர்தல் வாக்குச்சீட்டில் சின்னம் இடம்பெறாதது மற்றும் வாக்காளர்கள் சாவடி மாறி வாக்களித்தது போன்ற காரணங்களால் 2 இடங்களில் திங்கட்கிழமை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கான 2-ம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மொத்தமாக 78 புள்ளி 47 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    அதிகபட்சமாக விழுப்புரத்தில் 85.31 சதவிகித வாக்குகளும், கள்ளக்குறிச்சியில் 82.59 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.

    இதேபோல் ராணிப்பேட்டையில் 82.52 சதவிகிதம், வேலூரில் 81.07 சதவிகிதம், நெல்லையில் குறைந்தபட்சமாக 69.34 சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

    28 மாவட்டங்களில் நடத்தப்பட்ட இடைத்தேர்தல்களில் 70.51 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. சிவசைலம் ஊராட்சி, 3-வது வார்டில் நடந்த மறு வாக்குப்பதிவில் 80.79 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் உள்ள பூந்தண்டலம் ஊராட்சியில் வாக்குச் சீட்டில் தவறான சின்னம் பொறிக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது.

    இதனால் வாக்குச்சாவடி எண் 173-ல் மட்டும் திங்கட்கிழமை மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கம் 1-வது வார்டு உறுப்பினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அந்த வார்டுக்கான வாக்குச்சீட்டுகள் தவறுதலாக 2-வது வார்டுக்கு வழங்கப்பட்டதால் தேர்தல் நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் 2-வது வார்டுக்கு திங்கட்கிழமை மறு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: