தேர்தல் அலுவலர்களை நியமிக்க மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவு! விரைவில் உள்ளாட்சித் தேர்தல்?

மாநிலத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டது.

தேர்தல் அலுவலர்களை நியமிக்க மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவு! விரைவில் உள்ளாட்சித் தேர்தல்?
தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்
  • News18
  • Last Updated: September 18, 2019, 9:16 PM IST
  • Share this:
உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அலுவலர்களை நியமிக்க மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 2016-ம் ஆண்டு நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், பழங்குடியினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று தி.மு.க தொடர்ந்த வழக்கில் உள்ளாட்சித் தேர்தலை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்திஉத்தரவிட்டது. அதனையடுத்து, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, பல்வேறு காரணங்களால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவது தாமதமாகிவருகிறது.

தேர்தலை எதிர்கொள்ள மாநில அரசு அச்சப்படுகிறது என்று எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டிவருகின்றன. உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்தவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றமும் பலமுறை உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அலுவலர்களை நியமிக்க மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


மாநராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமிக்கவும் மாநிலத் தேர்தல் ஆணையம் ஆணை பிறப்பித்துள்ளது. மாநிலத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ‘விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்’ என்று தெரிவித்தார். அவருடைய அறிவிப்பு வெளியான சில தினங்களில் மாநிலத் தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Also see:

First published: September 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading