Home /News /tamil-nadu /

உள்ளாட்சி அமைப்புகளின் முக்கிய பணிகள் என்னென்ன?

உள்ளாட்சி அமைப்புகளின் முக்கிய பணிகள் என்னென்ன?

சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி

உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் முக்கிய பணியாக சாலை அமைத்தல், துப்புரவுப் பணிகள் ஆகியவை உள்ளன.

    தமிழ்நாட்டில் கடந்த 19-ம் தேதி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் வாக்குப் பதிவு இன்று நடைபெற்றுவருகிறது. இதுவரையில் நடந்த வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.கவுக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

    பா.ஜ.க, பா.ம.க, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் மிகக் குறைந்த அளவு வெற்றியைப் பெற்றிருந்தாலும் அவர்கள் இந்த வெற்றியை பெருமிதமாக கூறிக்கொள்கின்றனர். இந்தநிலையில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கான அதிகாரம் என்ன? உள்ளாட்சி அமைப்புகள் ஏன் முக்கியம் என்பது குறித்த கேள்விகள் எழுகின்றன.

    உள்ளாட்சி பிரதிநிதிகளின் செயல்பாடுகள் பொதுமக்களின் நேரடி வாழ்க்கையோடு தொடர்புடையாக உள்ளது. கிராம ஊராட்சிகளை ஒப்பிடும்போது மாநகராட்சி, நகராட்சி பிரதிநிதிகளுக்கான பணிகள் அதிகமாக உள்ளது.

    அந்த வகையில், மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் துப்புரவுபணிகள் முழுவதும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் கீழ் வருகிறது. துப்புரவு பணியின் கீழ் குப்பைகளை அகற்றுதல், கழிவுநீர் அகற்றல், கழிப்பறை வசதி, திடக்கழிவு மேலாண்மை போன்ற பணிகள் இடம்பெறுகின்றன.

    மாநகராட்சி - நகராட்சி அமைப்புகளின் முக்கிய பணிகள்

    ⦁ மக்கள் உடல்நலம் மற்றும் நோய்த்தடுப்பு
    ⦁ குடிநீர் வழங்கல்
    ⦁ தெரு விளக்கு வசதி மற்றும் கல்வி மேம்பாடு
    ⦁ கட்டிடங்கள் மற்றும் கட்டுவதை ஒழுங்குசெய்தல்
    ⦁ தொழிற்சாலைகள் மற்றும் தொழில்கள் ஏற்படுத்துவதை உரிமம் வழங்கி முறைப்படுத்துதல்
    ⦁ பிறப்பு/இறப்பு பதிவு
    ⦁ மயானங்களை ஏற்படுத்தி பராமரித்தல்.
    ⦁ சாலை வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் பராமரித்தல்

    மாநகராட்சி - நகராட்சிக்கான வருவாய் ஆதாரங்கள்

    ⦁ சொத்து வரி
    ⦁ தொழில் வரி
    ⦁ கேளிக்கை வரி
    ⦁ வணிக வளாகங்கள் வாடகை
    ⦁ பூங்காங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களின் வருவாய்
    ⦁ அரசு மானியம்
    ⦁ மாநில நிதி பகிர்வு
    ⦁ மத்திய அரசின் திட்டங்கள் மூலமான நிதி
    ⦁ பூங்காக்கள் மற்றும் கட்டிடங்கள் பராமரிப்பு
    ⦁ மாநில, மத்திய அரசுகளின் திட்டங்களை செயல்படுத்துதல்
    Published by:Karthick S
    First published:

    Tags: Local Body Election 2022

    அடுத்த செய்தி