ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவு

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் ஒன்பது மாவட்ட ஊரகப் பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 2016-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நீதிமன்ற தலையீட்டின் காரணமாக 3 ஆண்டுகள் கழித்து 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க உச்சநீதிமன்றம் சென்றது. உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் பல்வேறு நலத்திட்ட உதவிகள், மத்திய அரசு திட்ட நிதிகள் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. இதனையடுத்து தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் ஒன்பது மாவட்ட ஊரகப் பகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை.

Also Read: கேரள இளம்பெண் மரணம்.. கணவர் கொன்றதாக குற்றஞ்சாட்டும் பெற்றோர்..வாட்ஸ் அப் சாட்டில் வெளியான அதிர்ச்சித் தகவல்

தி.மு.க தொடர்ந்த வழக்கில் 9 மாவட்டங்களுக்கு 3 மாதத்தில் தேர்தலை நடத்துமாறு உத்தரவிடப்பட்டது. மாநில தேர்தல் ஆணையம் 2020-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிட்டிருந்தது. கொரோனா சூழல் காரணமாக தேர்தலை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் போதே தி.மு.க தலைவர் ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் எனக் கூறியிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு தற்போது பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் நேற்று நடைப்பெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின் ஆளுநரின் உரையில் தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கட்டாயமாக நடத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

Also Read: சாலையில் தாறுமாறாக ஓடிய கார் : மதுபோதையில் தகராறில் ஈடுப்பட்ட விசிக வழக்கறிஞர்

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பான வழக்கில் தேர்தல் நடைபெறாத 9 மாவட்டங்களில் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் 6 மாதம் அவகாசம் அளிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: DMK, Local Body Election 2019, MKStalin, Tamilnadu